புது வரவாக எதிர்நீச்சல் சீரியலில் மாஸ் எண்ட்ரி கொடுத்த நடிகை... இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே?

Published : Dec 30, 2025, 02:08 PM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புதிதாக நடிகை ஒருவர் எண்ட்ரி கொடுத்துள்ளார். ராணா எண்ட்ரிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த எண்ட்ரி அமைந்துள்ளது.

PREV
14
New Entry in Ethirneechal Thodargiradhu Serial

சன் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் ஒன்று. திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியலின் முதல் பாகம் வேறலெவல் ஹிட் அடித்ததை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஓராண்டுகளைக் கடந்து வெற்றிநடைபோட்டு வரும் இந்த சீரியல், வாரத்தின் 7 நாட்களில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் ஜனனி மற்றும் ஆதி குணசேகரனுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. தலைமறைவாக இருந்தாலும் ஜனனிக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார் குணசேகரன்.

24
யார் அந்த நியூ எண்ட்ரி?

ஆதி குணசேகரன் அனுப்பிய ஆட்கள் கடைசி நேரத்தில் ஜனனியின் ஃபுட் டிரக் நிறுத்தும் இடத்திற்கு அனுமதி தர மறுப்பதோடு, இங்கு கடை போட்டால் அடித்து நொறுக்கி விடுவோம் என்றும் மிரட்டலும் விடுத்துள்ளனர். அவர்கள் போலீஸுக்கும் பயந்தபாடில்லை. இதனால் பதற்றம் நிலவ, ஜனனி மற்றும் அவர் வீட்டு பெண்களையும் தமிழ் சோறு பிசினஸ் திறப்பு விழாவுக்கு வந்தவர்களையும் அந்த இடத்தின் ஓனர், அடியாட்களை வைத்து அடித்து துரத்துகிறார். இருதரப்பும் சாலைக்கு வந்து சண்டை போட்டுக்கொண்டிருக்க, அப்போது ஒரு லேடி காரில் வந்து கெத்தாக இறங்குகிறார்.

34
தியாவின் சர்ப்ரைஸ் எண்ட்ரி

அவர் வேறுயாருமில்லை பிரபல விஜே-வான தியா மேனன் தான். இவர் இந்த சீரியலில் மதிவதனி என்கிற ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். அவர் வந்ததும் ஜனனி தரப்பில் இருந்த நியாயத்தை புரிந்துகொண்டு, அவருக்கு ஆதரவாக நிற்கிறார். அவர் ஜனனியை எதிர்க்கும் ரெளடி கும்பலை அந்த இடத்தில் இருந்தே காலி செய்ததோடு, தமிழ் சோறு பிசினஸின் திறப்பு விழாவிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவரின் எண்ட்ரி யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்திருக்கிறது. ராணா வந்து ஜனனிக்கு உதவுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தியாவின் எண்ட்ரி மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது.

44
ரசிகர்கள் வியப்பு

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள தியா, இன்று முதல் தான் நடித்த எபிசோடுகள் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. மிஸ் பண்ணாம பார்த்து சப்போர்ட் பண்ணுங்க என கேட்டுக்கொண்டுள்ளார். தியாவின் எண்ட்ரியை பார்த்த ரசிகர்கள், இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர். தியாவின் கேரக்டரால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இனி என்னென்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories