கெளரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை வழக்கில், அவர் சாகும் முன் எழுதிய கடிதம் போலீஸிடம் சிக்கி உள்ளது. அதில் முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கௌரி' என்கிற பிரபலமான சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை நந்தினியின் மரணம் சின்னத்திரை உலகையே உலுக்கியுள்ளது. கன்னடம் மற்றும் தமிழ் சீரியல்களில் பிரபலமான நட்சத்திரமாக விளங்கிய நந்தினி, பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்யும் முன்னர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார்
25
சிக்கிய கடிதம்
நந்தினியின் கடிதம் காவல்துறையிடம் சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில் பல விஷயங்கள் குறித்து அவர் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, திருமணம் தொடர்பாக அழுத்தம் அதிகரித்திருந்தது. இந்த திருமண விஷயத்தில் தனது விருப்பங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. சொந்தமாக முடிவெடுக்க குடும்பத்தினர் தடையாக இருப்பது உள்ளிட்ட பல விஷயங்களை அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
35
மன அழுத்தத்தில் இருந்த நந்தினி
நந்தினி மனதளவில் மிகவும் துவண்டு போயிருந்ததாகவும் கடிதத்தில் எழுதியுள்ளார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு நந்தினி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். அதே நேரத்தில், குடும்பத்தினரின் வற்புறுத்தல், குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, வேலை உள்ளிட்ட பல காரணங்களால் நந்தினி கடந்த சில நாட்களாக மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து கடிதத்திலும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நந்தினியின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தார். ஆனால் பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார். தனது நடிப்பு கனவுக்கு உயிர் கொடுத்த தந்தையை இழந்த பிறகு நந்தினி மனதளவில் சோர்ந்து போயிருந்தார். இதற்கிடையில், கருணை அடிப்படையில் நந்தினிக்கு ஆசிரியர் வேலைக்கான வாய்ப்பு கிடைத்தது. நடிப்பை விட்டுவிட்டு வேலையைத் தேர்ந்தெடுக்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
55
போலீசார் விசாரணை
நந்தினி தான் அவரது குடும்பத்தில் மூத்த மகள், அவருக்கு ஒரு சகோதரி உள்ளார். இதனால் குடும்பப் பொறுப்பும் நந்தினியின் தோள்களில் இருந்தது. இந்த பல தடைகளுக்கு மத்தியில் தனது நடிப்பு வாழ்க்கை குறித்து அவர் கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மரணத்திற்கான தெளிவான காரணம், மரணத்தின் பின்னணியில் சதி, தூண்டுதல் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.