சிறகடிக்க ஆசை சீரியலில் பார்வதியிடம் கடன் கேட்கும் ரோகிணிக்கு சாட்சி கையெழுத்து போட மறுத்துவிடுகிறார் மீனா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தால், அவர் வாங்கிய கடன் தற்போது கழுத்தை நெரிக்கிறது. மனோஜுக்கு கடன் கொடுத்த கடன்காரர், கடனை தராவிட்டால் வீட்டை எடுத்துக் கொள்வேன் என எழுதி வாங்கி இருக்கிறார். இதனால் மனோஜ், வீட்டை பிரித்து தனக்கு சேர வேண்டிய பங்கை தனக்கு பிரித்துக் கொடுத்துவிடுமாறு சொல்ல, அதற்கு முத்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். விஜயாவும் வீட்டை பங்குபோட விடமாட்டேன் என திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
ரோகிணிக்கு உதவ மறுக்கும் மீனா
பார்வதியின் வீட்டிற்கு பூ கொடுக்க சென்றிருந்த மீனா, அப்போது அவர் யூடியூப்பிற்காக பேசிய கதையையும் கேட்கிறார். அப்போது அங்கு வரும் ரோகிணி, பார்வதியிடம் தனக்கு 5 லட்சம் கடனாக தருமாறு கேட்கிறார். பின்னர் உள்ளே சென்று சிவனிடம் கலந்தாலோசிக்கும் பார்வதி, இவளை நம்பி 5 லட்சம் கொடுக்க முடியாது, அதனால் மீனா சாட்சி கையெழுத்து போட்டால் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். இதை ரோகிணியிடம் வந்து சொல்ல, அவர் மீனாவை தனியாக அழைத்து பேசுகிறார். ஆனால் அவரோ, நான் என்னுடைய கணவர் சொல்லாமல் உன்னை நம்பி கையெழுத்து போடமாட்டேன் என சொல்லிவிட்டுச் செல்கிறார்.
34
உண்மையை சொன்ன மீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இதையடுத்து மீனா வீட்டுக்கு வரும்போது, கிரிஷ் தன்னுடைய ஸ்கூலில் பேச்சுப்போட்டி இருப்பதால் அதற்காக முத்துவிடம் ஐடியா கேட்கிறார். அப்போது பொய் சொல்வது எவ்வளவு பெரிய தப்பு என்பதை பற்றி பேசச் சொல்கிறார் முத்து. இதனால் மனமுடைந்து போகும் மீனா, இனி உண்மையை மறைக்கக் கூடாது என முடிவெடுத்து, இரவில் எல்லா உண்மையையும் சொல்கிறார். எல்லாவற்றையும் சொன்ன பின்னர் திரும்பி பார்க்கும் போது ரோகிணி அங்கே நிற்கிறார். நீங்க எப்போ உண்மையை சொல்ல துணிஞ்சிட்டீங்களோ இனி நான் உயிரோட இருக்க மாட்டேன் என கிச்சனுக்கு சென்று கத்தியால் கையை அறுக்க முயல்கிறார். மீனா அதை தடுத்துவிடுகிறார்.
அப்போது சத்தம் கேட்டு அங்கே செல்லும் முத்துவிடம், அப்படியே பிளேட்டை மாற்றி பேசும் ரோகிணி, மனோஜ் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அவருக்காக பார்வதியிடம் கடன் கேட்ட விஷயத்தை சொல்லி, மீனா சாட்சி கையெழுத்து போட்டால் தான் அவர்கள் பணம் தருவேன் என சொன்னதையும் கூறுகிறார். அதற்கு முத்துவும், அதெல்லாம் சரிவராது, நீ வேற எதாச்சும் யோசி என சொல்லிவிடுகிறார். மறுதினம் அண்ணாமலை சொத்தை பிரித்து எழுத ஆள் வர வைக்கிறார். அவர்களிடம் நான்கு பங்காக சொத்தை பிரிக்குமாறு சொல்கிறார். இதற்கு முத்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து என்ன ஆனது? சொத்தை பிரித்து எழுதினார்களா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.