எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ரெளடிகளின் எதிர்ப்பை மீறி கடையை திறந்துவிடுகிறார். கடை திறப்புக்கு முன்னர் காத்திருக்கும் ட்விஸ்ட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் தமிழ் சோறு பிசினஸ் திறப்பு விழாவுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ரெளடிகள் அடாவடி செய்ய, அவர்கள் ஃபுட் டிரக்கையும் அடிச்சு நொறுக்க முயன்றனர். அப்போது எண்ட்ரி கொடுத்த கொற்றவை அவர்களை தடுத்து நிறுத்தினார். இனி யாராச்சும் அவர்களை தொல்லை செய்தால் தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று கொற்றவை மிரட்டியும் அந்த ரெளடிகள் அசரவில்லை. ஏனெனில் அவர்களுக்கு டிஎஸ்பி வரை காண்டாக்ட் இருக்கிறது என்பது கொற்றவைக்கு தெரியவருகிறது. இதனால் அவராலும் ரெளடிகளை தடுக்க முடியவில்லை. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஜனனிக்கு சப்போர்ட் பண்ண வந்த கலெக்டர்
பின்னர் அவர் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று கடையை திறக்கிறார் ஜனனி. அப்போது அங்கு சாப்பிட சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களை ரெளடிகள் அடித்து விரட்டுவதோடு, இது எங்க இடம் என்று சொல்லி அனைவரையும் அங்கிருந்து வெளியே துரத்துகிறார்கள். அப்போது நடுரோட்டில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட, அங்கு ஒரு கார் வந்து நிற்கிறது. அதில் இருந்து இறங்கும் பெண், அவர்களை தடுத்து நிறுத்துகிறார். நீ யாரும்மா என அந்த ரெளடி கும்பல் கேட்க, தான் கலெக்டர் என்பதை சொல்கிறார். அவரிடம் என்ன பிரச்சனை என்பதை விவரித்துக் கூறுகிறார் ஜனனி. இதையடுத்து அவரும், ஜனனி தரப்பில் நியாயம் இருப்பதை தெரிந்துகொள்கிறார்.
34
ஞானத்துக்கு வார்னிங் கொடுத்த குணசேகரன்
பின்னர் கடை திறப்பு விழாவை நடத்தை தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறார் அந்த கலெக்டர். மறுபுறம் ஆதி குணசேகரனின் செயல்கள் மீது அதிருப்தியில் இருக்கும் ஞானம் அவரிடம் சென்று, நம்ம அனுப்புன ஆளுங்க ஏதாச்சும் பண்ணுனா, அந்த போலீஸும் செத்துப் போயிடுவால்ல அண்ணேன் என்று சொல்ல, அதற்கு குணசேகரன், டேய் ஞானம், உன் பிரச்சனை போலீஸ் காரி அங்க இருக்குறதா இல்லை உன் வீட்டுக்காரி அங்க இருக்குறதா என கேட்கிறார். இனிமே நீ வேடிக்கை மட்டும் பாரு, எதுவும் பேசக்கூடாது என சொல்லிவிட்டு, தாங்கள் செட் பண்ணிய ஆளை ஜனனி பிசினஸ் நடத்தும் இடத்துக்கு செல்ல சொல்கிறார் குணசேகரன்.
அந்த நபரும் பையில் குண்டுடன் அங்கு செல்கிறார். கடைக்கு வருபவர்களில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று தெரியாமல் அந்த நபரையும் கடைக்கு வரவேற்று என்ன வேண்டும் என கேட்கிறார் ஜனனி. அதன்பின்னர் அந்த நபர் தன்னுடைய பையில் இருக்கும் வெடிகுண்டை எடுக்கிறார். இதைப்பார்த்து ஜனனி ஷாக் ஆகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஜனனியின் ஃபுட் டிரக்கின் மீது வெடிகுண்டு வீசப்பட்டதா? ஆதி குணசேகரனின் பிளான் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? ஜனனி தப்பித்தாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும்.