டிஆர்பி ரேஸில் சன் டிவி சீரியல்களுக்கும், விஜய் டிவி சீரியல்களுக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த வாரம் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சினிமாவுக்கு நிகராக சின்னத்திரை சீரியல்களும் மாறிவிட்டதால் தற்போது அதை பார்ப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் சன் டிவிக்கு அடுத்த படியாக சீரியல்களில் கிங் ஆக இருப்பது விஜய் டிவி தான். இந்த இரண்டு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் வார வாரம் டிஆர்பி ரேஸில் போட்டிபோட்டு டாப் 10 இடங்களை பிடித்து வருகின்றன. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 36வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் எந்தெந்த சீரியல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
24
டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்
கடந்த வாரத்தை போல் இந்த வாரம் டாப் 10-ல் ஒரு ஜீ தமிழ் சீரியல் கூட இடம்பெறவில்லை. இந்த வாரம் 10வது இடத்தில் சன் டிவியின் இராமாயணம் தொடர் இடம்பெற்றுள்ளது. இந்த சீரியல் கிளைமாக்ஸை நெருங்கி வருவதால் இதற்கு 6.64 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. 8 மற்றும் 9-வது இடத்தை விஜய் டிவி சீரியல்கள் தான் தக்க வைத்து உள்ளன. இந்த வாரம் 9-வது இடத்தில் உள்ள சின்ன மருமகள் சீரியலுக்கு 7.35 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அதேபோல் 8-ம் இடத்தில் உள்ள அய்யனார் துணை சீரியலுக்கு 7.99 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த இரண்டு சீரியல்களும் கடந்த வாரத்தை காட்டிலும் அதிக டிஆர்பி பெற்றுள்ளன.
34
சரிவை சந்தித்த சிறகடிக்க ஆசை
சன் டிவியின் அன்னம் மற்றும் மருமகள் ஆகிய சீரியல்கள் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 7 மற்றும் 6-ம் இடத்திலேயே நீடிக்கின்றன. இதில் கடந்த வாரம் 7.92 புள்ளிகளை பெற்றிருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் 8.05 புள்ளிகளையும், கடந்த வாரம் 7.93 புள்ளிகளை பெற்றிருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் 8.24 டிஆர்பி புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐந்தாம் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. கடந்த வாரம் கெத்தாக 3-வது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் இரண்டு இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 8.28 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
சன் டிவியின் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் தொடர்கிறது, கயல் ஆகிய சீரியல்கள் தான் இந்த வாரம் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது. இதில் கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த கயல் இந்த வாரம் 8.77 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேபோல் கடந்த வாரம் 4ம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் 2 சீரியல் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி 8.92 டிஆர்பியை பெற்றுள்ளது. இதையடுத்து 9.40 புள்ளிகளுடன் மூன்று முடிச்சு சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ளது. வழக்கம் போல் முதலிடத்தை சிங்கப்பெண்ணே சீரியல் தான் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 9.73 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.