எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தம் இருக்கும் இடத்தை ரெளடிகள் சுத்து போட்டுள்ள விஷயத்தை ஜனனி கூறிவிடுகிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜீவானந்தமும், பார்கவியும் காட்டுக்குள் இருந்து தப்பி வந்து ஒரு பஞ்சு மில்லில் தஞ்சமடைந்து உள்ளனர். அங்கு உள்ள ஓய்வுபெற்ற மிலிட்டரி டாக்டர் ஒருவர் செய்யும் உதவியால், ஜீவானந்தம் உடலில் இருந்து புல்லட் எடுக்கப்பட்டு, அவர் உயிர்பிழைக்கிறார். இதையடுத்து, அவர்களை தேடி அலையும் ஜனனியை, ரெளடிகள் நெருங்கிய நிலையில், அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி கடையில் ஒளிந்துகொள்கிறார் ஜனனி. இப்படி அனல்பறக்க சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
கதிருக்கு வந்த டவுட்
மண்டபத்தில் தர்ஷனுக்கு மேக்கப் போட வந்த பெண் மீது சந்தேகத்திலேயே சுற்றிவரும் கதிர், மண்டபத்துக்கு வெளியே ரேணுகா மட்டும் நிற்பதால், நந்தினியை எங்கே என கேட்டு பிரச்சனை செய்கிறார். அப்போது அங்கே வரும் ஆதி குணசேகரன், ஏண்டா தேவையில்லாம சண்டை இழுத்துகிட்டு இருக்க என கேட்கிறார். அப்போது நந்தினி எங்கனு தனக்கு தெரிய வேண்டும் என சொன்னதோடு, வேகமாக மாடிக்கு சென்று ரூமில் புர்கா அணிந்திருக்கும் நந்தினியிடம் உன் பெயர் என்ன என கேட்கிறார். அவருக்கு தமிழ் தெரியாது என தர்ஷன் சொல்ல, நந்தினி அருகே செல்கிறார் கதிர்.
34
ஜீவானந்தத்தை அலர்ட் செய்யும் ஜனனி
மறுபுறம் ரெளடிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் ஜனனி, ஜீவானந்தத்திற்கு போன் போட்டு அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்கிறார். ரெளடிகள் எல்லாரும் நீங்க இருக்கும் இடத்திற்கு வெளியே தான் இருக்கிறார்கள் என்றும், நீங்க யாரும் வெளியே வர வேண்டாம். நான் எப்படியாச்சும் இவர்களை திசைதிருப்பிவிட்டுட்டு வந்து உங்களை அழைத்து செல்கிறேன் என சொல்கிறார் ஜனனி. காரில் பார்கவி இருக்கும் இடத்தை நெருங்கும் ஜனனி, அங்கிருக்கும் ரெளடிகளை திசைதிருப்பி விட பிளான் போடுகிறார். இதனால் ரெளடிகளும் ஜனனியை துரத்த ஆரம்பிக்கிறார்கள்.
மண்டபத்தில் நந்தினியை கதிர் கண்டுபிடித்தாரா? ஜனனி சக்சஸ்புல்லாக ரெளடிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஜீவானந்தம் மற்றும் பார்கவியை காப்பாற்றினாரா? நந்தினி தர்ஷனிடம் சொன்ன ரகசியம் என்ன? தர்ஷனுக்கு யாரோடு திருமணம் நடைபெற இருக்கிறது? ஜீவானந்தம் உயிர்பிழைத்த விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரிய வருமா? ஜீவானந்தம், பார்கவியுடன் வந்து தர்ஷனின் திருமணத்தை நிறுத்துவாரா? தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடக்குமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் நிச்சயம் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.