சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே மவுசு அதிகம். அதற்கு முக்கியமான காரணம் அந்த சீரியல்களின் விறுவிறுப்பான கதைக்களம் தான். அந்த வகையில், சன் டிவியில், கடந்த நான்கு ஆண்டுகளாக சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் தான் கயல். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ள இந்த தொடர், ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. கயல் சீரியல் டிஆர்பி ரேஸிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியல் தொடர்ந்து டாப் 3 இடங்களை பிடித்து அசத்தி வருகின்றது.
24
கயல் சீரியலுக்கு எதிர்ப்பு
சன் டிவியில் அதிக எதிர்ப்புகளை சந்தித்து வரும் சீரியலாகவும் கயல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்தடுத்து பிரச்சனைகள் மட்டும் தான் வந்த வண்ணம் உள்ளன. இதனால் தயவு செஞ்சு இந்த சீரியலை முடிக்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த கோரிக்கைக்கு லைட்டாக சீரியல் டீம் செவி சாய்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதற்காக இந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவராமல், இந்த மந்தமான கதைக்களத்தை விறுவிறுப்பாக மாற்றி இருக்கிறார்கள். அதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக தற்போது புதிதாக ஹீரோயின் ஒருவரை களமிறக்கி இருக்கிறார்கள்.
34
கயல் சீரியலில் சோனியா அகர்வால்
அதன்படி கயல் சீரியலில் புது வரவாக சோனியா அகர்வால் எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் மூர்த்தி பற்றி தெரிந்த ஒரு கேரக்டராக சோனியா அகர்வாலை கொண்டுவந்துள்ளனர். அவரின் வருகைக்கு பின் கதைக் களமும் மாற உள்ளதாம். இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கயல் சீரியலில் மூர்த்தி பற்றிய உண்மைகளை கட்டவிழ்த்துவிடும் ஒரு கதாபாத்திரமாக சோனியா அகர்வாலின் கேரக்டர் இருக்க வாய்ப்பு உள்ளது. அவரின் வரவால் இனி கயல் சீரியல் டிஆர்பியில் பிக் அப் ஆகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை சோனியா அகர்வால், சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வந்தார். இவர் தேவதையைக் கண்டேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பேமஸ் ஆனார். அதன்பின்னர் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்திலும் ஹீரோயினாக நடித்த இவர், விஜய், சிம்பு போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட சோனியா அகர்வால், பின்னர் சில ஆண்டுகளில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது சினிமாவில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்திருக்கிறார். இது அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.