சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கடைசி நேரத்தில் வந்து ஏலத்தை தடுத்து நிறுத்தி, சிந்தாமணியிடம் இருந்து வீட்டை மீட்டுள்ளார். வீட்டை மீட்ட மகிழ்ச்சியோடு, குடும்பத்தாரையும், நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்து ஒரு பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பூஜையை நடத்தும் பூசாரி, விஜயாவையும், அண்ணாமலையையும் அமர சொல்ல, அவரோ, இந்த வீடு மீண்டும் எங்கள் கைக்கு வந்ததுக்கு முக்கிய காரணம், முத்துவும் மீனாவும் தான். அதனால் அவர்கள் இருவரும் இந்த பூஜையில் அமரட்டும் என கூறிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பூஜை முடிந்ததும் மனோஜை அழைத்து பேசும் விஜயா, பூஜையின் போதே நான் உன்னை கவனித்தேன், உன் முகமே சரியில்ல என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு மனோஜ், இன்னைக்கு வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாருமே ஜோடி, ஜோடியாக சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் நான் மட்டும் சிங்கிளா இருந்தேன். எனக்கு எப்போ டைவர்ஸ் கிடைச்சு, நானும் அடுத்த கல்யாணம் பண்ணுறது என கேட்கிறார் மனோஜ், அதுமட்டுமின்றி நீங்க அன்னைக்கு ரோகிணியை திட்டியதால் அவள் டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என சொல்லிவிட்டால். நீங்க அவளிடம் மன்னிப்பு கேட்டால் தான் டைவர்ஸ் கிடைக்கும் என சொல்கிறார் மனோஜ்.
35
ரோகிணியிடம் போனில் பேசும் விஜயா
உடனே விஜயா, சரி ரோகிணிக்கு போன் போட்டு கொடு நான் பேசுறேன் என சொல்கிறார். இதையடுத்து ரோகிணிக்கு போன் போடும் மனோஜ், உன்கிட்ட அம்மா பேசணும்னு சொன்னாங்க என சொல்லி போனை கொடுக்கிறார். அப்போது, நான் சொன்ன ஒரு வார்த்தையால நீ ரொம்ப உடைஞ்சி போயிட்டியாமே என விஜயா கேட்க, அதற்கு ரோகிணி ஆமா ஆண்ட்டி என சொன்னதும். எனக்கும் கஷ்டமா தான் இருக்கு என விஜயா கூறியதை கேட்டதும், ஒருவேளை மன்னிப்பு கேட்டிருவாங்களோ என ரோகிணி யோசிக்கிறார்.
அதன்பின்னர் தான் ட்விஸ்டே காத்திருந்தது. உன்னை நான் ஒருவார்த்தையில் திட்டியிருக்க கூடாது என சொல்லும் விஜயா, இன்னும் நிறைய வார்த்தையில் உன்னை வாய்க்கு வந்தபடி நான் கண்டபடி திட்டியிருக்கணும் என சொல்ல, அதைக்கேட்டு ரோகிணி ஷாக் ஆகிறார். ஏன் டி என்ன திமிரு இருந்தா என்னை மன்னிப்பு கேட்க சொல்லிருப்ப, உன்கிட்ட நான் எதுக்குடி மன்னிப்பு கேட்கணும், என் பையன்கிட்ட சொல்லி என்னை மிரட்டுறியா, நீ ஒரு ஏமாத்துக்காரி. ஒன்னுமில்லாத வீட்டில் இருந்து வக்கத்து வந்தவ நீ. உன்னையெல்லாம் நான் சும்மா விட்டதே தப்பு என வெளுத்து வாங்குகிறார் விஜயா.
55
விஜயாவின் பேச்சால் ரோகிணி கடும் அப்செட்
தொடர்ந்து திட்டிய விஜயா, என்னை மன்னிப்பு கேட்க சொல்றதுக்கு உனக்கு என்ன டி தகுதி இருக்கு. நீ என் கையில கிடைச்சா உன்னை செருப்பால அடிப்பேன். நீயெல்லாம் ஒரு பொண்ணா டி. உனக்கெல்லாம் சூடு சொரணை எதுவும் இல்லையா. ஏன் புள்ளைய மட்டும் தான் ஏமாத்துனியா, இன்னும் எத்தனை பேர நீ கல்யாணம் பண்ணி ஏமாத்துன. நீயெல்லாம் என் கால்ல இருக்குற செருப்புக்கு சமம். இனிமே என் பையன் கடை பக்கம் வந்த, எதவச்சு அடிப்பேன்னு எனக்கே தெரியாது. வை டி போன என ஆக்ரோஷமாக திட்டி போனை கட் பண்ணுகிறார். விஜயாவின் இந்த பேச்சால் கடும் கோபத்தில் இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.