Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் சதியை முறியடித்து அவரிடம் இருந்து வீட்டை வெற்றிகரமாக மீட்டுள்ளார்கள் முத்து மற்றும் மீனா.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், வீட்டை மீட்ட கையோடு சிந்தாமணியை வம்பிழுத்துள்ளார் மீனா. உன் புத்தி இப்படிதான் போகும்னு எனக்கு நல்லாவே தெரியும். எப்படியாவது என்னிடம் இருந்து பணத்தை திருட பார்ப்பனு கடவுள் என் கனவுல ஏற்கனவே காட்டிட்டாரு, அதனால தான் நாங்க உஷார் ஆகிட்டோம். என்ன சொன்ன இந்த வீடே இல்லாம ஆகிடுமா, இனி நீ என்ன பண்ணாலும் இந்த வீட்டுல ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து கிளம்பி போ என சிந்தாமணியை விரட்டிவிடுகிறார் மீனா.
அந்த நேரம் பார்த்து வக்கீல் கிருஷ்ணா அங்கு வருகிறார். அவர் ஏலம் விடுபவர்களிடம் பேசுகையில், கோர்ட் சொன்ன தேதியில அவங்க பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டாங்க. இன்னைக்கு சாயிங்காலம் 6 மணிவரை டைம் இருக்கு. அதனால் சட்டப்படி இந்த வீடு அவங்களுக்கு தான் சொந்தம். வீட்டுக்கான பத்திரம் இவங்க கைக்கு கண்டிப்பா வந்தாகணும். அதே மாதிரி கடனையும் முழுவதுமாக கட்டிட்டாங்க. அதனால் இந்த பத்திரத்தில் இந்த பைனான்சியர் கையெழுத்து போட்டு கொடுக்கணும் என சொல்ல, அவரும் அவ்வாறே செய்கிறார்.
35
கையெழுத்து போடும் பைனான்சியர்
அப்போது வீட்டோட ஒரிஜினல் பத்திரம் எங்கு இருக்கிறது என பைனான்சியரிடம் வக்கீல் கேட்க, அதற்கு அந்த பைனான்சியர் அது இப்போ என் கையில இல்லை மேடம் என கூறுகிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த பத்திரம் முத்து கைக்கு வரவில்லை என்றால் உங்கள் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும் என எச்சரிக்கிறார். அதற்கு அந்த பைனான்சியர், நான் ஒரு மணிநேரத்தில் கொடுத்துவிடுகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
இதையடுத்து வீட்டின் கதவை திறந்து அனைவரும் உள்ளே செல்கிறார்கள். அப்போது விஜயா வீட்டை மீட்டதை நினைத்து கண்ணீர் சிந்துகிறார். நான் இறந்த பிறகும் இந்த வீட்டில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அண்ணாமலை சொல்ல, அதற்கு முத்து, கண்டிப்பா அப்பா, இந்த வீடு எப்போதுமே உன் பெயரிலும் அம்மா பெயரிலும் தான் இருக்கும் என உறுதியளிக்கிறார். வீட்டுக்கு திரும்ப வந்ததை கோலாகலமாக கொண்டாட முடிவெடுத்த முத்து, வீட்டை பூக்களால் அலங்கரித்ததோடு மட்டுமின்றி, உறவினர்கள் எல்லாரையும் வர வைத்துள்ளார்.
55
ஸ்வேதாவுக்கு ரூட் விடும் மிஸ்ரா
அப்போது அங்கு வந்த மிஸ்ரா, ஸ்வேதாவிடம் சென்று வழிந்து வழிந்து பேசுகிறார். இதைப்பார்த்த ஸ்ருதி, ரவியிடம், மிஸ்ரா ஸ்வேதாவை ரூட் விட்டுட்டு இருக்காரு. ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசுறாங்க பாரு என சொல்கிறார். இப்படி அங்கு எல்லோரும் ஜோடி, ஜோடியாக அமர்ந்து ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்க, அதைப்பார்த்து கடுப்பாகிறார் மனோஜ். மறுபுறம் சீதாவிடம் அருண் ஏன் வரவில்லை என கேட்கிறார் மீனா. அதற்கு அவர் அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கு அதான் வரல என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.