Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?

Published : Jul 29, 2026, 09:01 AM IST

Siragadikka Aasai Serial 29 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க திட்டம் தீட்டுகிறார் விஜயா. அதன் பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், விஜயா மற்றும் பார்வதி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ரோகிணியின் கர்ப்பத்தில் வளரும் குழந்தை மனோஜின் குழந்தைதான் என்ற நம்பிக்கை விஜயாவுக்கு உறுதியாகிறது. இதனால், "இனி மனோஜ் மற்றும் ரோகிணியை சேர்த்து வைத்துவிடு" என்று பார்வதி அறிவுரை கூறுகிறார். ஆனால் விஜயாவின் மனதில் வேறு ஒரு கொடூரமான திட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்வதி வீட்டிற்கு ரோகிணியை விருந்துக்கு அழைக்கச் சொல்லும் விஜயா, உணவில் ஏதாவது கலந்து கொடுத்து அவள் வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்துவிடலாம் என கூறுகிறார்.

Siragadikka Aasai : அருணை அவமானப்படுத்திய சீதாவின் அம்மா... மீனாவின் வாழ்க்கையை மாற்றும் ஆபரேஷன்..!

25
விஜயாவின் சதியை எதிர்க்கும் பார்வதி

இதைக் கேட்ட பார்வதி கடும் கோபமடைந்து, "ஒரு உயிருக்கு தீங்கு செய்ய நான் ஒருபோதும் துணை நிற்க மாட்டேன். இப்படிப்பட்ட எண்ணமே பாவம்" என்று விஜயாவை கண்டித்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இருப்பினும், ரோகிணியின் குழந்தையை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயா திட்டவட்டமாக இருக்கிறார். மறுபக்கம், முத்துவும், மீனாவும் சீதாவை கராத்தே பயிற்சி மையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அடிக்கடி அருணால் அவமானப்படுத்தப்படும் சீதா, இனிமேல் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று முத்துவும் மீனாவும் முடிவு செய்து, அவரை பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர்.

35
மனோஜை சந்திக்கும் ரோகிணி

இதற்கிடையில், மனோஜ் அலுவலகத்தில் ஆழ்ந்த கவலையுடன் அமர்ந்திருக்கிறார். அவரை ஜோதிடரும், நண்பர்களும் உற்சாகப்படுத்த முயற்சிக்கின்றனர். அந்த நேரத்தில் மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு வரும் ரோகிணி, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதாக அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்குகிறார். ஆனால் இந்த செய்தியைக் கேட்டும் மனோஜின் மனக்குழப்பம் குறையவில்லை. பெயரை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஜோதிடரின் வார்த்தைகளை நினைத்து அவர் குழம்புகிறார்.

45
மனோஜுக்கு அட்வைஸ் பண்ணிய ஜோதிடர்

அதற்கு ஜோதிடர், "நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும் முன் சில சோதனைகள் வருவது இயல்புதான். அதைக் கடந்து சென்றால் வெற்றி நிச்சயம்" என்று நம்பிக்கை அளிக்கிறார். இறுதியாக, மீனாவின் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் முத்து அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் மோர் வழங்கி தனது வேண்டுதலை நிறைவேற்றும் காட்சிகள் மனதை நெகிழ வைக்கின்றன. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

55
காத்திருக்கும் ட்விஸ்ட்

இதையடுத்து என்ன நடக்கப்போகிறது, ரோகிணி வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றும் விஜயாவின் சதி வெற்றியடையுமா? ரோகிணியின் கர்ப்பத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? மனோஜின் குழப்பம் எப்போது தீரும்? அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது எப்போது அம்பலமாகும்? மீனாவுக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடியுமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனிவரும் எபிசோடில் பதில் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories