Siragadikka Aasai : மனோஜை மடக்கிய விஜயா... கனகாவின் செயலால் ஷாக் ஆன மீனா, முத்து!

Published : Jul 24, 2026, 10:39 AM IST

Siragadikka Aasai Serial 24 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு சென்ற முத்து, மீனா அங்கு கனகாவை பார்த்து ஷாக் ஆகிறார்கள். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் பல திருப்பங்கள் அரங்கேறி உள்ளன. குறிப்பாக மனோஜைச் சுற்றியுள்ள சந்தேகம் மேலும் வலுத்ததுடன், ரேகாவின் நடவடிக்கைகள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தின. சிந்தாமணி, மீனாவின் குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ரேகா திடீரென தலையிட்டு பதிலடி கொடுக்கிறார். "பணம் இருந்தாலே எல்லாவற்றையும் வாங்க முடியாது. சத்யாவை கூட பணம் கொடுத்து வாங்க முடியுமா?" என்று துணிச்சலாக பேசிய அவர், மீனாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

25
விஜயாவிடம் பொய் சொன்ன மனோஜ்

இதற்கிடையில், மனோஜ் தனது கடையில் வியாபாரம் குறைந்து வருவதை நினைத்து, வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய சலுகைகளை அறிவிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் விஜயா, வக்கீலை சந்தித்து வந்த தகவலை மனோஜிடம் நேரடியாக பகிர்கிறார். ரோகிணியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மனோஜ்தான் தந்தையாக இருக்கலாம் என வக்கீல் கூறியதை சுட்டிக்காட்டி, உண்மையை சொல்லும்படி விஜயா மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் மனோஜ் வழக்கம்போல அந்தக் குழந்தைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்துக்கொண்டே இருக்கிறார்.

35
ரேகாவை நினைத்து ஃபீல் பண்ணும் மீனா

டிஎன்ஏ பரிசோதனை எடுத்தால் உண்மை தெரிந்துவிடும் என விஜயா எச்சரித்தாலும், மனோஜ் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. பின்னர், ரோகிணியுடன் பேசி விரைவில் விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வழக்கு நீண்ட காலம் செல்லும் என்றும் விஜயா அறிவுறுத்தி அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கம், மீனா தனது வீட்டில் ஸ்ருதி, ரவி மற்றும் முத்துவுடன் ஆலோசனை நடத்துகிறார். வசதியான வாழ்க்கையில் இருந்து சாதாரண வாழ்க்கைக்கு வந்த ஸ்ருதிக்கு இங்கு எப்படி இருக்கிறது என்று கேட்டு அவரது கருத்தை அறிகிறார்.

45
மனோஜுக்கு ஷாக் கொடுத்த முத்து, மீனா

இதன் மூலம், அதேபோல் வசதியான வாழ்க்கையை வாழ்ந்த ரேகாவும் தற்போது சிறிய வீட்டில் எப்படி இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். ரேகாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த மீனா மற்றும் முத்து, ஏர் கண்டிஷனர் வாங்க மனோஜின் கடைக்குச் செல்கிறார்கள். அதே நேரத்தில் கனகாவும் அங்கு ஃபிரிட்ஜ் பார்க்க வந்திருக்கிறார். அப்போது கனகா, மனோஜின் கையைப் பிடித்து "ஹஸ்பண்ட்" என்று அழைத்து கலாட்டா செய்ய ஆரம்பிக்கிறார். இதைப் பார்த்த மீனாவும் முத்துவும் அதிர்ச்சியடைகிறார்கள். உடனே மனோஜ் அங்கிருந்து நழுவி, ரேகாவை சந்தோஷுடன் இருக்கச் செய்கிறார்.

55
எஸ்கேப் ஆன மனோஜ்

பின்னர் மீனா, "கனகா ஏன் உன்னை கணவர் என்று சொல்கிறார்?" என்று மனோஜிடம் கேட்க, அவர் வழக்கம்போல் அந்த நியூமராலஜிஸ்ட்டைக் காரணம் காட்டி சமாளிக்கிறார். அதன்பிறகு சந்தோஷ் தன்னை கனகாவின் கணவர் என்று அறிமுகப்படுத்தியதும், மீனா மற்றும் முத்துவின் சந்தேகம் தற்காலிகமாக நீங்குகிறது. இறுதியாக, ரேகாவுக்காக ஏர் கண்டிஷனரை வாங்கிய மீனா மற்றும் முத்து அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று சத்யாவிடம் இது ரேகாவின் வசதிக்காக வாங்கப்பட்டதாக கூறுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. அடுத்த எபிசோடில் மனோஜின் ரகசியம் வெளிவருமா? ரோகிணியின் குழந்தை விவகாரம் எந்த திருப்பத்தை எடுக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories