Siragadikka Aasai Serial 23 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கர்ப்பமாக இருப்பதால் மனோஜுக்கு டைவர்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியின் பிரபலமான 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது மனோஜ், ரோகிணியிடம் பணம் கொடுத்து விவாகரத்தை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று நினைத்த நிலையில், நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. மனோஜின் செயல்பாடுகளை கவனித்த முத்து, மீனா, ரவி மற்றும் ஸ்ருதி ஆகியோர், இந்த விவகாரத்தில் மனோஜ்தான் உண்மையை மறைக்கிறார் என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர். ரோகிணி இந்த விஷயத்தில் பொய் சொல்லக்கூடியவர் அல்ல என்பதால், அவருடைய தரப்பே உண்மையாக இருக்கலாம் என்று அனைவரும் பேசிக் கொள்கின்றனர்.
25
வழக்கறிஞரை சந்திக்கும் விஜயா
இதற்கிடையில், மறுநாள் விஜயா தனது வழக்கறிஞரை மீண்டும் சந்தித்து, விவாகரத்து வழக்கின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை பெறுகிறார். அப்போது வழக்கறிஞர், தற்போது உள்ள சூழ்நிலையில் மனோஜுக்கு விவாகரத்து கிடைப்பது மிகவும் கடினம் என்று தெளிவுபடுத்துகிறார். அதற்குக் காரணமாக, ரோகிணி கர்ப்பமாக இருப்பதையும், அவர் குழந்தையின் தந்தை மனோஜ்தான் என்று கூறி வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், நீதிமன்றத்தில் இருவரும் மனப்பூர்வமாக சம்மதித்தால்தான் விவாகரத்து வழங்கப்படும் என்றும், ரோகிணி எதிர்ப்பு தெரிவித்தால் வழக்கின் போக்கே மாறிவிடும் என்றும் விளக்குகிறார்.
35
மனோஜுக்கு இருக்கும் சட்ட சிக்கல்
விஜயா, குழந்தைக்கும் மனோஜுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதிட முயற்சிக்க, அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், அந்த வாதம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடப்படலாம் என எச்சரிக்கிறார். அந்த பரிசோதனையில் குழந்தையின் தந்தை மனோஜ்தான் என்பது உறுதியானால், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் கூடுதல் சட்டச் சிக்கல்கள் உருவாகும் என்றும் கூறுகிறார். மேலும், மனோஜை நேரில் சந்தித்த அனுபவத்தின் அடிப்படையில், அவருடைய நடத்தையைப் பார்த்தால் குழந்தையின் தந்தை அவராக இருக்க வாய்ப்பு அதிகம் என தனது தனிப்பட்ட கருத்தையும் வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.
இதைக் கேட்ட விஜயா அதிர்ச்சியடைந்து, குடும்பத்தினருடன் ஆலோசித்து அடுத்த முடிவை எடுப்பதாகக் கூறி அங்கிருந்து கிளம்புகிறார். மறுபுறம், குடும்பச் செலவுகளுக்காக வேலை தேடும் முயற்சியில் ரேகா நேர்முகத் தேர்வுக்கு செல்கிறார். வழியில் மீனாவை சந்தித்த அவர், இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது சிந்தாமணி மீண்டும் மீனாவின் குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பேசுகிறார். அதற்கு மீனா பதிலளிக்க முயன்றாலும், ரேகா தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்த்து, தன்னை சத்யா நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்று கூறி, மீனாவுடன் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
55
அடுத்து என்ன நடக்கப்போகிறது?
இவ்வாறு மனோஜின் விவாகரத்து முயற்சி மேலும் சிக்கலாகும் நிலையில், டிஎன்ஏ பரிசோதனை உண்மையிலேயே நடைபெறுமா? ரோகிணி அடுத்ததாக என்ன முடிவு எடுப்பார்? விஜயா குடும்பம் இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிக்கும்? மனோஜ் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரியவருமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரவிருக்கும் எபிசோட்களில் பதில் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.