Siragadikka Aasai : சிந்தாமணியின் சூழ்ச்சியால் கைதாகும் சத்யா... ரேகாவை கண்டுபிடித்தாரா மீனா?

Published : Jun 10, 2026, 10:20 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை கடத்தியதாக கூறி சத்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சிந்தாமணியின் கணவரிடம் நேரிலேயே சென்று சொல்லி விடுகிறார். தனக்கு இது பற்றி முடிவு எடுக்க கொஞ்சம் டைம் வேண்டும் என சிந்தாமணியின் கணவர் அவகாசம் கேட்டுள்ளார். இதையடுத்து சிந்தாமணியை சந்தித்து விஷயத்தை சொன்ன அவர் சத்யாவை என்ன செய்யலாம் என சிந்தாமணி இடம் கேட்க அவரோ முதலில் ரேகாவை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர சொல்லுங்கள், அவளை வெளியே விடாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்து சத்யா நம் மகளை கடத்தி விட்டதாக போலீசில் புகார் கொடுக்கலாம் என திட்டம் தீட்டுகிறார் சிந்தாமணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!

25
கைதாகும் சத்யா

சிந்தாமணி சொன்னபடியே தன் மகளை சென்னைக்கு வர வைத்த ரேகாவின் தந்தை அவரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன் மகளை சத்யா கடத்தி விட்டதாக கூறி போலீசிலும் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரை ஏற்ற போலீசார் உடனடியாக சத்யாவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த சந்திரா போலீஸிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அவர்கள் சத்யாவை விடவில்லை. பின்னர் மீனாவுக்கு போன் போட்டு சத்யா கைதான விஷயத்தை சொல்கிறார் சந்திரா. மீனாவும் இந்த விஷயத்தை சீதாவிடமும் சொல் என கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷன் கிளம்ப முடிவு எடுக்கிறார். இந்த நேரம் பார்த்து முத்து வீட்டுக்கு வருகிறார்.

35
இரக்கம் காட்டாத அருண்

பின்னர் முத்து இடம் இந்த விஷயத்தை சொல்லும் மீனா இதுக்காக தான் நான் அவனை ரேகாவை காதலிக்க வேண்டாம் என்று சொன்னேன் எனக்கு கூறுகிறார். மறுபுறம் சந்திராவும் சீதாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்மகன் எந்த தப்பும் செய்யவில்லை என கெஞ்சுகிறார்கள். ஆனால் போலீஸோ சத்யாவை லாக்கப்பிற்குள் வைத்து அடிக்கிறார்கள். வலி தாங்க முடியாமல் சத்யா கதறுகிறார். அப்போது அங்கு இருந்த அருணிடம், சத்யா எந்த தப்பும் பண்ணல அவனைவிட சொல்லுங்க என சீதா கெஞ்சுகிறார். கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத அருண், இது ஒன்னும் நம்ம வீடு இல்ல போலீஸ் ஸ்டேஷன் இங்கு என் வேலையை செய்ய விடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

45
சிந்தாமணியின் சூழ்ச்சி

இதையடுத்து முத்துவும், மீனாவும் அங்கு வருகிறார்கள். போலீசார் தங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காததால் இந்த விஷயத்தை மிஸ்ராவிடம் சொல்கிறார் முத்து. மறுபுறம் மீனா தான் அந்த பைனான்சியர் வீட்டுக்கு சென்று ரேகா அங்கு இருக்கிறாரா என்று விசாரிக்கிறேன் எனக் கூறிவிட்டு கிளம்புகிறார். அங்கு அவர் சென்றபோது சிந்தாமணி பைனான்சியரை பார்க்க வருகிறார். அவர் உள்ளே சென்று கணவரிடம் ரேகா இங்கு இருக்கும் விஷயம் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது. கண்டிப்பா அந்த முத்துவும் மீனாவும் இந்நேரம் ரேகாவை தேட ஆரம்பித்திருப்பார்கள். அதனால் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

55
கண்டுபிடித்த மீனா

இதையடுத்து சிந்தாமணி கணவரின் வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவரை சந்திக்கிறார் மீனா. அவரிடம் தனக்கு பைனான்சியரிடம் பணம் வாங்கித் தருமாறு கேட்பது போல் பேச்சு கொடுக்க, அந்தப் பெண்ணோ நான் சொன்னால் அவர் கேட்க மாட்டார் அவருடைய மகள் ரேகா சொன்னால் வேண்டுமானால் கேட்பார் என சொல்கிறார். உடனே மீனா அந்த ரேகா எங்க இருக்காங்க என கேட்க அதற்கு அந்த பெண் ரேகா இன்று காலை தான் வீட்டுக்கு வந்தாங்க வந்ததிலிருந்து ரூமுக்குள்ளேயே இருக்காங்க. வெளிய வரவே இல்ல என சொல்கிறார். இதன் மூலம் ரேகா சிந்தாமணி கணவர் வீட்டுக்குள் தான் இருக்கிறார் என்பது மீனாவுக்கு தெரிய வருகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்

Read more Photos on
click me!

Recommended Stories