Siragadikka Aasai : சத்யாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சிந்தாமணி... போலீஸில் புகார் கொடுத்த ரேகாவின் தந்தை

Published : Jun 09, 2026, 08:56 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா, ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சிந்தாமணியின் கணவரிடம் சொன்னதை அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை காதலிக்கும் சத்யா, தங்களின் காதல் விவகாரம் ரேகாவின் வீட்டுக்கு தெரிந்துவிட்டதால், அவளை ஐதராபாத்தில் ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள் என முத்துவிடம் சொல்ல, உடனே முத்து, சத்யாவை ரேகாவின் தந்தையிடம் போய் பேசு என சொல்வதோடு மட்டுமின்றி அவருக்கு துணையாகவும் சென்றுள்ளார். அங்கு சென்று சத்யா, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சொல்ல, அதற்கு அவர் தனக்கு யோசிக்க டைம் வேண்டும் என கேட்டிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!

25
ரோகிணியின் பிளான் சொதப்பல்

மறுபுறம் மனோஜ் தன்னுடைய அம்மா விஜயாவை அழைத்துக் கொண்டு ஒரு விருது விழாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்று பார்த்தால், ரோகிணி அழைத்த விழாவுக்கு தான் விஜயாவும் மனோஜை அழைத்து வந்திருக்கிறார். அங்கு சிறந்த அம்மா - பையனுக்கான விருதும் மனோஜ் - விஜயாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறந்த ஜோடிக்கான விருது போட்டியில் கலந்துகொள்ள ரோகிணி, மனோஜ் பெயரையும் கொடுத்திருந்த நிலையில், அதைக்கேட்ட விஜயா, செம கடுப்பாகி, ரோகிணியை திட்டுவதோடு, அவன் உன் கூடலாம் வரமாட்டான் என சொல்லி மனோஜை தன் கையோடு அழைத்துச் செல்கிறார்.

35
முத்துவிடம் சிக்கிய மீனா

இதையடுத்து முத்து வீட்டுக்கு வந்ததும் மீனாவிடம் இன்னைக்கு என்னவெல்லாம் நடந்துச்சு என கேட்க, அதற்கு மீனா, தான் சத்யாவை சந்தித்ததை தவிர எல்லாவற்றையும் முத்துவிடம் சொல்கிறார். பின்னர் முத்து தான் என்னவெல்லாம் செய்தேன் என சொல்லும் போது முதலாவதாக, தான் சத்யாவுடன் சென்று ரேகாவின் அப்பாவை சந்தித்ததாக கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன மீனா, அய்யய்யோ ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சா என கேட்க, நீ ஏன் சத்யாவை சந்தித்து அவனை திட்டியதை மட்டும் சொல்லல என கேட்கிறார் முத்து.

45
சிந்தாமணியை சந்திக்கும் ரேகாவின் அப்பா

பின்னர் மீனா, அவங்க பெரிய இடம், அவங்களுக்கும் நமக்கு செட் ஆகாதுங்க, அதனால் தான் அவனை சந்தித்து அந்த பொண்ணை மறந்துருனு சொன்னேன் என கூறுகிறார். ரேகாவின் தந்தை கொஞ்சம் டைம் கேட்டிருக்கும் விஷயத்தையும் சொல்லிவிடுகிறார் முத்து. மறுபுறம் சிந்தாமணி தன்னுடைய கணவரை ஒரு ஓட்டலில் சந்தித்து பேசுகிறார். அப்போது அந்த சத்யாவுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே வந்து பொண்ணு கேட்பான். அவனை உடனே வேலையை விட்டு தூக்குறேன் என சொல்கிறார் ரேகாவின் தந்தை.

55
சிந்தாமணியின் மாஸ்டர் பிளான்

அதற்கு சிந்தாமணி, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க, முதலில் ரேகாவை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர வைங்க. அவளை உங்க வீட்டில் அடைச்சி, அவளிடம் இருந்து போனை எல்லாம் பிடுங்கீருங்க. அதுக்கப்புறம் அந்த சத்யா நம்ம பொண்ணை கடத்திட்டான்னு போலீஸ்ல புகார் கொடுப்போம். அவனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி சாத்துவாங்க, அதுக்கு அவனோட குடும்பத்தாரே பயந்து அந்த பொண்ணு வேண்டாம்னு அவனை சொல்ல வச்சிடுவாங்க என ஐடியா கொடுக்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories