Siragadikka Aasai : காதல் விவகாரத்தை போட்டுடைத்த சத்யா... ரேகாவின் தந்தை எடுத்த தடாலடி முடிவு

Published : Jun 08, 2026, 08:32 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவின் தந்தையை சந்தித்த சத்யா, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை போட்டுடைத்துள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் மகள் ரேகாவும், மீனாவின் தம்பி சத்யாவும் காதலித்து வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே. இந்த விஷயம் சிந்தாமணிக்கும் அவருடைய கணவருக்கும் தெரிந்ததை அடுத்து, அவர்கள் ரேகாவை ஐதராபாத்துக்கு அனுப்பிவைத்துவிட்டனர். தற்போது ரேகா அங்கு ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை மீனாவிடம் சொன்ன சத்யா, ரேகா இல்லேனா நானும் செத்துருவேன் என்று எமோஷனலாக பேசுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்

25
சத்யாவின் காதலை எதிர்க்கும் மீனா

மீனாவும், அவருடைய அம்மாவும், சத்யாவை பிரையின் வாஷ் பண்ண பார்க்கிறார்கள். ரேகாவை மறந்துவிடு, அவங்க ரொம்ப மோசமானவங்க, அவங்களுக்கும் நமக்கும் செட் ஆகாது என சொல்கிறார். அதற்கு சத்யா, இந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லவா என கேட்க, தயவு செஞ்சு உங்க மாமாகிட்ட மட்டும் சொல்லிடாத என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிடுகிறார் மீனா. ஆனால் அக்கா பேச்சை கேட்காத சத்யா, நேராக முத்துவிடம் சென்று விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதற்கு முத்து, நீ நேரடியாக சென்று அவங்க அப்பாகிட்ட பேசு என சொல்கிறார்.

35
முத்து கொடுத்த ஐடியா

ரேகாவின் அப்பா என் மீது ரொம்ப மரியாதை வச்சிருக்கார், நான் எப்படி பேசுவேன், எனக்காக நீங்க வந்து பேசுறீங்களா மாமா என கேட்கிறார் சத்யா. அதற்கு முத்து, நான் உனக்கு துணைக்கு வேணா வர்றேன், ஆனா நான் பேசமாட்டேன், நீ தான் போய் பேசணும் என கூறுகிறார். இதையடுத்து சத்யா ரேகாவின் அப்பாவை சந்தித்து பேச செல்கிறார். அங்கு சென்று அவரிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தயங்கி நிற்கிறார் சத்யா. பின்னர் அவர் சத்யாவுக்கு தண்ணி கொடுத்து என்ன ஆச்சு என கேட்க, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சொல்லிவிடுகிறார் சத்யா.

45
ரேகாவின் தந்தை எடுத்த முடிவு

அதற்கு அவர் இப்படி திடீர்னு வந்து சொல்லுற எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என கேட்கிறார். ரேகா எனக்கு ஒரே பொண்ணு அதனால் அவளுடைய வாழ்க்கை பத்தி யோசிக்க எனக்கு டைம் கொடு என சொல்கிறார். அதற்கு சத்யாவும் ஓகே சொல்ல, பின்னர் முத்துவிடம் வந்து நடந்ததை கூறுகிறார். அவரும் உங்க ஓனர் நல்ல மனுஷன் டா நல்ல முடிவா தான் சொல்லுவாரு என சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபுறம் ரோகிணி ஒரு கார்பரேட் விழாவில், ஜோடியாக கலந்துகொள்ள மனோஜுக்கு போன் போட்டு வரச் சொல்ல, மனோஜும் அந்த விழாவுக்கு கிளம்புகிறார்.

55
ரோகிணி vs விஜயா

அந்த நேரம் பார்த்து விஜயா, மனோஜிடம் வந்து, தன்னுடைய தோழி ஒரு விழாவுக்கு அழைத்திருப்பதாகவும், அங்கு சென்றால் சிறந்த அம்மா, பையன் விருது நமக்கு கிடைக்கும், உடனே கிளம்பு என மனோஜை அழைக்க, அவர் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் விஜயாவுடன் கிளம்பிச் செல்கிறார். பின்னர் தான் தெரிகிறது, ரோகிணி அழைத்த பார்ட்டிக்கு தான் விஜயாவும் வந்திருக்கிறார். அங்கு ரோகிணியை பார்த்ததும் விஜயாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறுகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories