Siragadikka aasai Gomathi Priya Roped in For Mahanadhi Serial
விஜய் டிவியில் டாப் டிரெண்டிங் சீரியலாக சிறகடிக்க ஆசை இருந்து வருகிறது. இந்த சீரியலில் வெற்றி வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கோமதிப் பிரியா நடித்து வருகிறார். அவர் மீனா என்கிற ஹோம்லி பெண் வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் தான் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாகவும் இருந்து வருகிறது. இந்த சீரியல் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதிப் பிரியா, தற்போது திடீரென மகாநதி சீரியலுக்கு தாவி இருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன் பின்னணியை பார்க்கலாம்.
24
மகாநதி சீரியலில் கோமதிப் பிரியா
மகாநதி சீரியலில் கோமதிப் பிரியா ஹீரோயினாக நடிப்பது உண்மை தான். ஆனால் அது தமிழில் அல்ல மலையாளத்தில்... தமிழில் சூப்பர்டூப்பர் ஹிட் அடித்த மகாநதி சீரியலை மலையாளத்தில் அதே பெயரில் ரீமேக் செய்கின்றனர். அதில் தான் கோமதிப் பிரியா நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த சீரியல் மலையாளத்தில் ஏசியாநெட் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் கோமதிப்பிரியா நடிக்க உள்ள தகவல் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இவர் நடித்த சிறகடிக்க ஆசை சீரியலும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
34
மகாநதி சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டாகும் சீரியல்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. இதற்கு முன்னர் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆஹா கல்யாணம், அய்யனார் துணை போன்ற சீரியல்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது மகாநதி சீரியலும் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறது. இந்த சீரியல் எப்போதிலிருந்து மலையாளத்தில் ஒளிபரப்பாகும் என்கிற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
மகாநதி சீரியலை தமிழில் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, கனா காணும் காலங்கள் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் தொடர்களை இயக்கி இருக்கிறார். மகாநதி சீரியலில் ஹீரோ விஜய் கதாபாத்திரத்தில் ஸ்வாமியும், ஹீரோயின் காவேரி கதாபாத்திரத்தில் லட்சுமிப் பிரியாவும் நடிக்கிறார். தமிழில் லட்சுமிப் பிரியா நடிக்கும் கதாபாத்திரத்தில் தான் மலையாளத்தில் கோமதிப் பிரியா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.