சன் டிவிக்கு நிகராக சீரியல்களை போட்டிபோட்டு விஜய் டிவியும் ஒளிபரப்பி வரும் நிலையில், 2025-ம் ஆண்டின் 42வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பப்படும் சேனல்கள் எதுவென்றால் அது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தான். இந்த மூன்று சேனல்கள் தான் டிஆர்பி ரேஸிலும் போட்டிபோட்டு வருகின்றன. இதில் கடந்த சில வாரங்களாக சன் டிவிக்கு டஃப் கொடுத்து வந்த விஜய் டிவி சீரியல்கள், இந்த வாரம் அதளபாதாளத்துக்கு சென்று இருக்கிறது. இதனால் டிஆர்பியிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 42வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை பார்க்கலாம்.
211
10. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், கடந்த வாரத்தை போல் இந்த வாரம் 10ம் இடத்திலேயே நீடிக்கிறது. கடந்த வாரம் 6.46 புள்ளிகள் பெற்றிருந்த இந்த சீரியல், இந்த வாரம் 7.27 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
311
வீர ஹனுமன்
இராமாயணம் தொடரைத் தொடர்ந்து சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ஹனுமன் என்கிற ஆன்மிக சீரியல், கடந்த வாரம் 6.54 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 7.28 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை தக்கவைத்துள்ளது.
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வந்த சிறகடிக்க ஆசை, இந்த வாரம் அந்த இடத்தை நழுவவிட்டுள்ளது. கடந்த வாரம் 7.75 ரேட்டிங் உடன் 7-வது இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 7.81 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
511
7. அய்யனார் துணை
மதுமிதா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல், விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக மாறி இருக்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 7.51 புள்ளிகள் உடன் 8-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 7-வது இடத்துக்கு முன்னேறி உள்ளதோடு 8.13 டிஆர்பியையும் தட்டிதூக்கி உள்ளது.
611
6. அன்னம்
சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான அன்னம் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அபி நட்சத்திரா நடிக்கும் இந்த சீரியல் கடந்த வாரம் 7.98 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 8.68 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தை தக்க வைத்துள்ளது.
711
5. எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 8.55 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.96 புள்ளிகளுடன் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
811
4. மருமகள்
சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல், கடந்த வாரம் 8.07 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் மளமளவென முன்னேறி 9.17 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.
911
3. கயல்
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடிப்பில் சன் டிவியில் வெற்றிநடைபோட்டு வரும் கயல் சீரியல், கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் மூன்றாம் இடத்தை தக்கவைத்து உள்ளது. இந்த சீரியலுக்கு 9.65 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
1011
2. மூன்று முடிச்சு
சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களின் ஒன்றான மூன்று முடிச்சு சீரியலில் சுவாதி கொண்டே நாயகியாக நடித்து வருகிறார். 2ம் இடத்திலேயே நீடிக்கும் இந்த சீரியல் 10.55 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது.
1111
1. சிங்கப்பெண்ணே
டாப் 10 டிஆர்பி பட்டியலில் நம்பர் 1 இடத்தை சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் பிடித்துள்ளது. மனிஷா மகேஷ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 10.86 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து இருக்கிறது.