ஆனந்தியை அழிக்க அரவிந்த் போடும் ஸ்கெட்ச்! கோகிலாவுக்காகப் போராடும் சிங்கப்பெண் - சிங்கப்பெண்ணே மெகா ட்விஸ்ட்!

Published : Feb 17, 2026, 09:54 PM IST

Anandhi Struggle For Kokila Aravind Karunakaran Evil Plan: சிங்க பெண்ணே சீரியல் தனது அக்காவின் வாழ்க்கை துணையுடன் சேர்த்து வைக்க போராடும் ஆனந்தி!. ஆனந்தியை அழிக்க துடிக்கும் அரவிந்த் மற்றும் கருணாகரன் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
14
சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட், Singapenne today episode

கோகிலாவின் கணவருக்கு போன் செய்து அன்பு என்ன சகல உங்க வீட்ல ஏதும் பிரச்சனை என்று கேட்க எல்லா கோகிலாவுக்காக தான் என்று கோகிலாவின் கணவர் கூறுகிறார். அப்பொழுது ஆனந்தி மாமா என்ன பிரச்சனை மாமா உங்க அப்பா அம்மா எனக்கு போன் செய்து உங்க கிட்ட பேசணும்னு சொல்றாங்க எனக்கு பயமா இருக்குது என்று ஆனந்தி சொல்கிறார். அப்பாவும் அம்மாவும் ஊர்ல இருந்து வந்து கோகிலா கிட்ட பேசணும்னு சொல்றாங்க என்ன விஷயம் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறாங்க என்று சொல்கிறார். கோகிலாகிட்டைடயும் ஆனந்திக்கிட்டையும் பேசணும்னு சொல்றாங்க. அதனாலதான் நான் உங்களை வீட்டுக்கு வர சொன்னேன் ஆனா கோகிலா வரமாட்டேன்னு ரொம்ப பிடிவாதமா இருக்கா என்று சொல்கிறார்.

24
எதிர்பாராமல் வரும் கோகிலா:

அன்பு ,ஆனந்தி மற்றும் கோகிலாவின் கணவர் மூவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பார்க்காமல் விதமாக கோகிலா வருகிறார். ஆமா நான் பிடிவாதமா தான் இருக்கேன் அதுக்குன்னு நீங்க சப்போர்ட்டுக்கு ஆள் அனுப்புறிங்களா என்று கேட்கிறார். சகலைக்கு நான் தான் போன் செய்தேன் அவரை திட்டாதீங்க என்று அன்பு சொல்கிறார். பாவம் மாமா ஏன் அவர்கிட்ட சண்ட போடுற அக்கா என்று ஆனந்தியும் சொல்கிறார். எதுக்குக்கா இப்படி கோபப்படுற உன் மாமனார் மாமியார் வந்தா நீ போய் பார்க்கிறது தான் மரியாதை. அதை விட்டுட்டு மாமா கிட்ட ஏன் வர மாட்டேன்னு சொல்லி சண்டை போடுற. 

34
சன் டிவி சிங்கப்பெண்ணே லேட்டஸ்ட் ட்விஸ்ட்

நான் போய் பார்க்க மாட்டேன் நான் சொல்றேன் வரும்போது என்கிட்ட பேசணும்னு தான் சொல்லிட்டு கண்டிஷன் போட்டு தான் வராங்க . அந்த கண்டிஷன் தான் சரிப்பட்டு வராது என்று சொல்கிறார் கோகிலா. ஏன் சரிப்பட்டு வராது என்ன பேச போறாங்கன்னு தெரியாம நம்ம எல்லாம் முடிவு எடுக்கிறது தப்பு என்கிறார் அன்பு. அதற்கு ஆனந்தி ஆமாக்கா உன்கிட்ட மட்டுமா பேசணும்னு சொல்லி இருக்காங்க. எங்க கிட்டயும் பேசணும்னு சொல்லி இருக்காங்க. அன்பு கிட்டயும் பேசணும்னு சொல்லி இருக்காங்களா என்று கேட்கிறார் கோகிலா. ஆமா அக்கா எங்க கிட்டயும் பேசணும்னு சொல்லி இருக்காங்க என்னதான் பேசுறாங்கன்னு வா நம்ம போய் பார்த்தா தானே தெரியும் என்று சொல்கிறார் ஆனந்தி. மூவரும் கோகிலாவின் மாமனார் மாமியாரை பார்ப்பதற்கு செல்கின்றனர்.

44
மித்ரா வீட்டிற்கு செல்லும் மகேஷ்:

மகேஷ் மித்ராவின் வீட்டிற்கு சென்று அந்த ரகுவை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். பிரபு எந்த தப்பு சென்றான் அவருக்கு யார் பணம் கொடுத்தார் என்று பேசிக் கொண்டிருக்கும்போது மித்ரா எனக்கு தெரியாது என்றும் பயத்துடன் இருக்கின்றார். மகேஷ் ரகுவிற்கு யாரையாவது மூலமாக தான் பணம் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது எதிர்பாக்காத விதமாக கருணாகரன் வீட்டுக்குள் நுழைகிறார் அதிர்ச்சியில் இருக்கிறார் மித்ரா இத்துடன் இந்த எபிசோட் முடிவடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories