Singapenne Serial Today Episode Feb 13 Promo and Highlights in Tamil : ஆனந்தி கடத்தப்பட்டதைத் தொடர்ந்து தனது மனைவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அன்பு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Singapenne Serial Today Episode Feb 13 Promo and Highlights in Tamil : சிங்கபெண்ணே சீரியலில் ஆனந்தியை முன்பகையை பழிதீர்க்க திருமூர்த்தி ஆனந்தியை கடத்தி வைக்கப்பட்டு துன்புறுத்தி வருகிறான் அன்பு அந்த இடத்தை கண்டுபிடித்து போலீசார் உதவி மூலம் அந்த இடத்திற்கு செல்கிறார் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
Singappenne Serial Feb 13 Episode Highlights Tamil
சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நேற்றைய எபிசோடில் ஆனந்தியை கடத்திச் சென்றுள்ளார் திருமூர்த்தி . ஆனால் அன்புக்கு ஆனந்தி கடத்தப்பட்டால் என்பது அப்போது தெரியாது அது தெரியாமல் அனைத்து இடங்களிலும் ஆனந்தியை தேடி அலைகிறார் அன்பு. அதன் பிறகு ஆனந்தி இருக்கும் ஹாஸ்டலுக்கு பக்கத்தில் ஒவ்வொரு நபரிடமும் ஆனந்தியின் போட்டோவை காட்டி இந்த பொண்ண பாத்திருக்கீங்களா எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா என்று விசாரிக்க தொடங்குகிறார் அப்படி விசாரிக்கும் போது ஒரு பெண்மணி நான் இந்த பொண்ண பார்த்தேன் இங்க ஒரு கார் இருந்துச்சு அதுல இந்த பொண்ணு ஏறி போயிட்டாங்க என்று விவரத்தை அந்த பெண்மணி சொன்ன உடனே அன்பு கண்டறிந்தார் அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவை செக் பண்ணி பார்க்கும்போது ஒரு காரில் ஆனந்தியை ஏற்றி அழைத்துச் செல்வது தெரிய வருகிறது.
34
சிங்கப்பெண்ணே சீரியல் இன்றைய எபிசோட் Feb 13
அப்பொழுது அன்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கிறார் சார் ஆனந்தியே கடத்திட்டாங்க சார் இங்க ஒரு கார்ல ஏத்திட்டு போன சிசிடிவி புட்டேஜ் என்கிட்ட இருக்கு நான் அந்த ஸ்பாட்ல தான் இருக்கேன் நீங்க வாங்க சார் என்று போலீசாரிடம் சொல்ல போலீசார் நீங்க அங்கேயே இருங்க நான் வந்துறேன் என்று சொல்கிறார். சார் நான் காரினி நம்பர் கொடுக்கிறேன் அதை செக் பண்ணி லொகேஷன் எங்கன்னு பாருங்க சார் என்று அன்பு சொல்ல.நம்பரை அனுப்புங்க அன்பு என்று போலீசார் கூறுகிறார். அந்த இடத்திற்கு போலீசார் செல்கிறார்.
44
Singappenne Serial Today Episode Feb 13
அது ஒரு புறம் இருக்க மறுபுறம் அரவிந்த் திருமூர்த்திக்கு போன் செய்கிறார்.இங்க வந்துட்டியா என்று திருமூர்த்தி கேட்க வந்தேனா உள்ள வரமாட்டேனா என்று அரவிந்த் கூறுகிறார். எதுக்கு போன் பண்ண என்று திருமூர்த்தி கேட்க இங்கு அன்பு ஆனந்தி இருக்கும் இடத்தை தேடிக்கிட்டு இருக்கா நீ அங்க ஜாக்கிரதையா இரு என்று சொல்ல அப்ப நான் இங்கேயே ஆனந்தியை எரிச்சரவா அவ கைக்கு கிடைக்காத அளவுக்கு நான் ஆனந்தியை பன்னிரவா என்று சொல்ல. வேண்டாம் வெயிட் பண்ணு நாங்க வர என்று அரவிந்த் சொல்கிறார்.
அப்போ அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தி சிரிக்கிறார் எதுக்கு சிரிக்கிற என்று திருமூர்த்தி கேட்க நீ யாரு கிட்ட பேசனு எனக்கு தெரியாது ஆனா அன்ப பத்தி தான் நீ பேசி இருப்பேன்னு எனக்கு தெரியும். அன்பு எப்படியும் நான் இருக்கிற இடத்தை கண்டுபிடித்து வந்து என்னை கூட்டிட்டு போயிருவாரு என்று சவால் விடுகிறார் ஆனந்தி. பெரிய சிங்க பெண்ணே தான் நீ என்று திருமூர்த்தி சொல்ல ஒவ்வொரு பெண்ணும் ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு போராடறவங்க சிங்கப் பெண் தான் என்று ஆனந்தி பதிலடி கூறும் வகையில் பேசுகிறார். பிறகு அரவிந்த் மற்றும் திருமூர்த்தி ஆனந்தியை கொள்வதற்கு திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர். இத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.