இதையடுத்து பேசும் கோமதி தன் கோபம் நீண்ட நாட்கள் இருக்காது என்பதை நினைவூட்டி, சுகன்யாவையும் காந்திமதியையும் கிச்சனுக்கு அழைத்து செல்கிறாள். அதே நேரத்தில், வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை மகிழ்விக்க, ராஜியிடம் அனைவரையும் வீட்டைச் சுற்றிக் காட்டச் சொல்லும் பழனி, உறவுகளுக்குள் உள்ள தூரத்தை குறைக்க முயற்சிக்கிறான்.
அண்ணன்கள், மச்சான்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார வேண்டும் என்ற எண்ணத்தில், சரவணன், செந்தில், கதிர், முத்துவேல் ஆகியோரைக் கட்டாயப்படுத்தி அருகருகே அமர வைக்கிறார். கதிர் தயங்கினாலும், அதை மரியாதையாக மாற்றி பேசும் பழனி, அந்த தருணத்தை நகைச்சுவையாக்குகிறான். ஆனால், சக்திவேல் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு மறைமுக சவால் ஒளிந்திருப்பது தெளிவாக தெரிகிறது. செந்திலின் வேலை பற்றி அவர் கேட்க, அதற்கான பதில் சூழலை சற்றே சூடாக்குகிறது.