அய்யனார் துணை சீரியலில் நிலாவை வெறுப்பேற்றுவதற்காக, சோழன் தன்னுடைய போனில் அடுத்த கல்யாணத்துக்காக பொண்ணு தேடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் சேரன் அனைவரிடமும் பொய் சொல்லிவிட்டு சந்தாவுடன் ரொமன்ஸ் பண்ண போன விஷயம் சோழன் மற்றும் பல்லவன் வாயிலாக அனைவருக்கும் தெரியவருகிறது. சேரன் வீட்டுக்கு வந்ததும் அவரை தம்பிகள் எல்லாரும் சேர்ந்து கலாய்த்ததோடு, ஒரு மணிநேரமா சந்தா வீட்டுக்குள்ள என்ன பண்ணுன என கேட்க, அவரோ, சந்தா தனக்கு மசாலா டீ போட சொல்லிக் கொடுத்ததக கூறுகிறார். அதேபோல் நிலாவுக்கு அடிபட்ட விஷயமும் எல்லாருக்கும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
நிலாவை கடுப்பேற்றும் சோழன்
டைவர் கேட்ட நிலாவை வெறுப்பேற்றும் விதமாக சோழன் ஒரு செயலை செய்திருக்கிறார். நிலா வீட்டில் உட்கார்ந்து தனது புராஜக்டுக்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது சோழன் அங்கு உட்கார்ந்து போனை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். எதுக்காக இப்படி போனை பார்த்து சிரிக்குற என நிலா கேட்கையில், தான் மேட்ரிமோனியில் தனக்காக பொண்ணு பார்ப்பதாக சொல்கிறார் சோழன். இதைக்கேட்டு கடுப்பான நிலா, லேப் டாப்பை தூக்கிக் கொண்டு ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்கிறார். நம்ம பிளான் ஒர்க் அவுட் ஆகுது என சோழன் சந்தோஷப்படுகிறார்.
34
சோழனை எச்சரிக்கும் நடேசன்
இதையடுத்து ஓடிச் சென்று தன்னுடைய அப்பா நடேசனை எழுப்பும் சோழன், பார்த்தியா நீ எதோ நிலா எதுக்கு மயங்கமாட்டானு சொன்னேல்ல, நான் இப்போ இப்படியெல்லாம் செய்கிறேன் அவ காண்டாகி போறாள் என சொல்ல, அதற்கு நடேசன், டேய் நிலா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல, நீ வேணா பாரு, நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தேன்னா உனக்கு பிரச்சனை தான் ஆகும் என எச்சரிக்கிறார். மறுநாள் காலையில், நிலா பெரிய புராஜக்டுக்கான பிரசண்டேஷன் பண்ண உள்ளதால், ஆபிஸுக்கு ரெடியாகிறார். அதற்காக லேப் டாப்பையெல்லாம் சாமி முன் வைத்து கும்பிடுகிறார் நிலா.
இந்த புராஜக்ட் சக்சஸ் ஆக நிலாவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். இதையடுத்து ஆபிஸ் கிளம்பும் நிலாவிடம், நீ சோழன் கூடவே காரில் சென்று இறங்கிக்கோ என சேரன் சொல்ல, அதெல்லாம் வேண்டாம், நான் ஆட்டோவில் போய்க்கிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார் நிலா. ஆட்டோவில் செல்லும் போதும் லேப் டாப்பை எடுத்து வைத்து வேலை பார்த்துக் கொண்டே செல்கிறார் நிலா. இறங்கும் போது மறந்துபோய் லேப்டாப்பை ஆட்டோவிலேயே மறந்து வைத்துவிட்டு செல்கிறார் நிலா. பின்னர் ஆபிஸ் உள்ளே சென்ற பின்னர் தான் லேப்டாப்பை ஆட்டோவில் தவறவிட்டது நிலாவுக்கு தெரியவருகிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.