அய்யனார் துணை சீரியலில் நிலா வண்டியில் இருந்து கீழே விழுந்த விஷயம் அறிந்து சோழன் பதறிப்போகிறார். சேரனும் என்னவென்று விசாரிக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டில் தனியாக இருக்கும் நிலாவுக்காக நடேசன் கிச்சனுக்குள் சென்று டீ போடுகிறார். டீ போட்டு நிலாவுக்கு கொடுத்து எப்படி இருக்கு என கேட்கிறார் நடேசன். அவரும் அதை குடிச்சிட்டு, ரொம்ப ரொம்ப சுமாரா தான் இருக்கு என சொல்லிவிடுகிறார். உடனே நடேசன், நான் சூப்பரா டீ போடுவேன். இந்த டீ தூள் சரியில்ல, இப்படி தான் டீ குடிக்கணும், நீங்க போடுற மாதிரி சக்கரை தண்ணி மாதிரி குடிச்சா உடம்புக்கு என்ன ஆகுறது என நடேசன் நிலாவிடம் சொல்ல, அவருக்கு வழக்கம்போல் அவரை கிண்டலடித்து கலாய்க்கிறார்.
24
சேரனுக்காக வெயிட் பண்ணும் தம்பிகள்
இதையடுத்து வீட்டுக்கு வரும் சோழன், பாண்டியன் மற்றும் பல்லவன் மூவரும் வீட்டு வாசலிலேயே தன் அண்ணனுக்காக காத்திருக்கிறார்கள். ஏனெனில் அவர் நைட்டு சாப்பிடுவதற்கு எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரேன் என சொல்லி இருக்கிறார். அதனால் அண்ணன் எப்போ வருவார் என மூவரும் காத்திருக்கிறார்கள். சோழனுக்கு பசியெடுத்ததால், அண்ணணின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் சேரன் வீட்டுக்கு சாப்பாடுடன் வருகிறார். வந்ததும் அனைவரும் பசியோடு இருப்பதை பார்த்த அவர், சரி வாங்க உள்ள போய் சப்பிடலாம் என அழைக்கிறார்.
34
சேரனை சிக்க வைத்த பல்லவன்
அப்போது, பங்க்ஷனுக்கு போனீங்களே அது என்ன ஆச்சு என சோழன் கேட்க, அதற்கு சேரன், பங்க்ஷன் நல்லா நடந்ததுடா, சரியான கூட்டம் என வாய்கூசாமல் பொய் சொல்ல, இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பல்லவன் சிரிக்கிறார். இதைப்பார்த்த நிலா, அவர் சொல்ல சொல்ல நீ ஏண்டா சிரிக்குற என பல்லவனிடம் கேட்கிறார். அதற்கு அவர், அண்ணன் பங்க்ஷனுக்கெல்லாம் போகல, அவர் நம்மகிட்ட பொய் சொல்லிட்டு சந்தாவை பார்ப்பதற்காக சந்தா வீட்டுக்கு சென்று அவருடன் ரொமான்ஸ் பண்ணி இருக்கிறார் என்கிற உண்மையை கூறுகிறார் பல்லவன்.
இல்ல நான் பங்க்ஷனுக்கு தான் போனேன் என சேரன் சமாளிக்க, பின்னர் சோழன் எல்லாவற்றையும் சொல்கிறார். நாங்க உங்களை பாலோ பண்ணிதான் வந்தோம். ஒரு மணிநேரம் கதவை பூட்டிக்கிட்டு என்ன பண்ணுனீங்க என சோழன் கேட்ட பின்னர் தான் உண்மையை ஒப்புக்கொள்கிறார் சேரன். சந்தா தனக்கு மசாலா டீ எப்படி போடுவதுனு கத்துக் கொடுத்ததாக கூறுகிறார் சேரன். பின்னர் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுகிறார்கள்.
அப்போது நிலாவிடம் வந்து, காயத்துக்கு மருந்து போட்டியா என கேட்கிறார் நடேசன். அதன்பின்னர் தான் நிலா விழுந்து காயமடைந்த சம்பவம் அனைவருக்கும் தெரியவருகிறது. இதுக்கப்புறம் நீ வண்டில போகக்கூடாது. சோழா நீயா அழைச்சிட்டு போ என சொல்கிறார்கள். அதன்பின்னர் சோழன், நிலாவின் கையை பிடித்து, எங்க அடிபட்டிருக்கு என செக் பண்ணுகிறார். இதனால் நிலாவுக்கு சற்று மனம் மாறுகிறது. சோழன் தன்னுடைய கையை பிடித்து பாசத்தோடு பார்த்ததால், அவர் மீது இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக நிலாவுக்கு குறையத் தொடங்குகிறது. இதன்பின்னர் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.