தாராவை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணும் கதிர்... அடுத்தக்கட்ட ஆக்‌ஷனில் இறங்கிய நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Jan 23, 2026, 11:10 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிரை விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கும் நந்தினி, தன் மகள் தாராவை அழைத்துச் செல்ல முயன்ற நிலையில், அதை தடுத்து நிறுத்தி உள்ளனர். அதன்பின்னர் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நிம்மதியாக தொழில் செய்துகொண்டிருந்த பெண்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்காக கதிரும், ஞானமும் களமிறங்கி இருக்கிறார்கள். பெண்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்கள் பிசினஸுக்காக வாங்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் எரித்த கதிர், பின்னர் தன்னுடைய மாமியாரை வர வைத்து, உங்க மகளை இப்பவே வீட்டுக்கு வரச் சொல்லுங்க என மிரட்ட, அவர்களும் நந்தினியை போன் போட்டு வரச் சொல்கிறார்கள். நந்தினி வீட்டுக்கு வந்து பார்க்கும்போது தாராவும் அங்கே இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
கதிருடன் சண்டை போடும் நந்தினி

வீட்டுக்குள் கோபத்துடன் வரும் நந்தினி, கதிர் உடன் சண்டை போடுகிறார். அப்போது இனி உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, உன்னை விவாகரத்து செய்யப்போகிறேன் என சொல்லிவிட்டு, அங்கிருந்து தன் மகள் தாராவை அழைத்துச் செல்ல பார்க்கிறார் நந்தினி. உடனே தாராவின் கையை பிடித்து இழுக்கும் கதிர், போகணும்னா நீ மட்டும் போ, என் பொண்ணு வரமாட்டா என சொல்கிறார். தாரா தன் அம்மாவுடன் செல்ல ஆசைப்பட, அவளை அறிவுக்கரசி பிடித்து வைத்துக் கொள்கிறார். மகளை விடச் சொல்லி கதிர் உடன் சண்டை போடுகிறார் நந்தினி, ஆனால் அவர் விட மறுக்கிறார்.

35
நந்தினியை விரட்டும் கதிர்

நான் என் புள்ளைய கூட்டிட்டு கிளம்புறேன் என நந்தினி சொன்னதும், அதெல்லாம் முடியாது நீ மட்டும் கிளம்பு என கையை பிடித்து தள்ளிவிடுகிறார் கதிர். இதையடுத்து வாக்குவாதம் செய்யும் நந்தினி, நீ மிரட்டுனா பயந்துருவேன்னு நினைச்சியா, இப்பவே ஆன்லைனில் புகார் கொடுத்து, போலீசோடு வந்து என் புள்ளைய கூட்டிட்டு போறேன் பாக்குறியா என நந்தினி சொல்ல, போடினு விரட்டிவிடுகிறார் கதிர். அப்போது அங்கிருந்த நந்தினியின் அம்மா, கொஞ்சம் பொறுமையா போடி என சொல்ல, ஏய் இங்க என்ன நடந்துகிட்ருக்கு பொறுமையா போகச் சொல்லிட்டு இருக்க, பைத்தியக்காரி, வா போலாம் என வெளியே அழைத்துச் செல்கிறார்.

45
வீட்டுச் சிறையில் தாரா

அப்போது தாரா, தன்னுடைய அம்மாவுடன் செல்ல முயல, அவரின் கையை பிடித்து ரூமுக்குள் தரதரவென இழுத்துச் செல்லும் அறிவுக்கரசி, அவரை உள்ளே போட்டு கதவை சாத்துகிறார். இவ்வளவு பிரச்சனைகளையும் ஹாலில் உள்ள டைனிங் டேபிளில் அமர்ந்து குத்துக்கல் போல் பார்த்துக் கொண்டிருக்கும் விசாலாட்சி, எதுவும் பேசாமால் அமைதியாக இருக்கிறார். இதையடுத்து ஜனனிக்கு போன் போட்டு பேசும் நந்தினி, தாராவை அவர்கள் அடைத்து வைத்து வெளியே விடமறுப்பதை கூறி அழுகிறார். இங்கு நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதாக கூறும் நந்தினி, இன்னைக்கு ஒரு முடிவெடுத்துட்டு தான் வருவேன் என கூறுகிறார்.

55
தாராவை மீட்பாரா நந்தினி?

எதுவும் பிரச்சனை பண்ண வேண்டாம் என சொல்லும் ஜனனி, நீங்க எல்லாவற்றையும் பேசி முடிச்சுட்டு வரச் சொல்கிறார். அய்யோ ஜனனி, நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா... இங்க நிக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ரணமா வழிக்குது என கூறுகிறார். ரேணுகா அக்கா வந்த உடனே மொத்தமா அவனை தீர்த்துவிட்டு வரேன் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? போலீஸுடன் வந்து தன் மகள் தாராவை நந்தினி மீட்பாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories