
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்து, எப்படி பணம் சம்பாதிப்பது என நினைத்து ஃபீல் பண்ணுகிறார். அதுமட்டுமின்றி அப்பார்ட்மெண்ட் பில்டிங் முழுக்க பூ கொடுக்க உனக்கு பெரிய ஆர்டர் வந்துச்சுல்ல, அது என்ன ஆச்சு என அவர் கேட்கும் போது, அந்த ஃபில்டர் மேடம் கோமாவுக்கு சென்ற விஷயத்தை சொல்லும் மீனா, நாளைக்கு இது தொடர்பாக அந்த கம்பெனி மேனேஜரை பார்க்க இருப்பதாக சொல்கிறார். மறுநாள் காலையில் மீனா அந்த கம்பெனிக்கு கிளம்பிச் செல்கிறார். அப்போது அந்த ஆர்டர் தொடர்பாக பேச சிந்தாமணியும் அங்கு வந்திருக்கிறார்.
பின்னர் அந்த கம்பெனி மேனேஜர் இருவரையும் ஒன்றாக அழைத்து பேசுகிறார். அப்போது சிந்தாமணி தனக்கு ஆர்டர் கொடுக்குமாறு கேட்க, மீனாவும் மேடம் எனக்கு தான் அந்த ஆர்டர் தருவதாக சொல்லி இருந்தார் என சொல்ல, இதனால் குழப்பமடையும் மேனேஜர், உங்களுக்கு அந்த அபார்ட்மெண்டில் கடை போட்டு விற்பனை செய்ய நாங்கள் அனுமதி கொடுப்போம். அதற்கு முன்னதாக யார் நன்றாக பூ கொடுக்கிறீர்கள் என்பதை பார்க்க, இருவரும் விதவிதமான பூக்களை கட்டி எடுத்து வாருங்கள், அதை அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் மக்களிடமே கொடுத்து முடிவு செய்ய சொல்கிறோம் என கூறுகிறார்.
மறுபுறம் விஜயா, மனோஜின் டைவர்ஸ் கேஸ் தொடர்பாக வக்கீலை சந்திக்க செல்கிறார். அப்போது அந்த வக்கீல், சில தகவல்களை கேட்டு தெரிந்துகொள்கிறார். உங்க பையன் கோர்ட்டில் தெளிவா பேசனும், அங்க மாத்தி பேசுனா பிரச்சனை ஆகிவிடும் என கூறுகிறார். சரி இந்த விஷயம் முதலில் யாருக்கு தெரியும் என வக்கீல் கேட்க, என் இரண்டாவது பையன் முத்துவுக்கு தான் தெரியும் என விஜயா சொன்னதும், சரி அவருக்கு போன் போடுங்க என சொல்கிறார். இதையடுத்து விஜயா முத்துவுக்கு போன் போடுகிறார். அம்மாவின் போனில் இருந்து முதன்முறையாக அழைப்பு வந்ததை பார்த்து சந்தோஷத்தில் பூரித்து போகிறார் முத்து. பின்னர் வக்கீலிடம் போனை கொடுத்து அவர் முத்துவிடம் கேட்க வேண்டிய விவரங்களை எல்லாம் கேட்டு தெரிந்துகொள்கிறார்.
பின்னர் மீனா தன்னுடைய அம்மா வீட்டில் சீதா உடன் சேர்ந்து டிசைன் டிசைனாக பூ கட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சத்யாவின் ஓனர் மகள் வீட்டுக்கு வருகிறார். சத்யாவை தன்னோடு ஆபிஸுக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அப்போது சத்யா ஒரு சட்டையை போட்டு வர, இது நல்லா இருக்காது, அன்னைக்கு போட்டிருந்தேல்ல பூ போட்ட சட்டை அதை போட்டுட்டு வா என அந்த ஓனர் பொண்ணு சொல்ல, சத்யாவும் உடனே உள்ளே போய் டிரெஸ்ஸை மாற்றிக் கொண்டு வருகிறார். இதையெல்லாம் நோட் பண்ணிய சீதா, ஒரு வேளை இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்களோ என மீனாவிடம் கேட்கிறார். அதெல்லாம் இல்ல, என கூறுகிறார் மீனா.
இதையடுத்து கோர்ட்டில் மனோஜ்- ரோகிணியின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது மனோஜ் தரப்பில் வக்கீல் ஆஜராகிறார். ஆனால் ரோகிணி தனக்கு வாதாட வக்கீல் இல்லை என்றும், அதற்கு செலவு செய்ய காசு இல்லாததால், நானே எனக்காக வாதிடுகிறேன் என கூறுகிறார். தன் பக்கம் உண்மை இருப்பதாக ரோகிணி சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள். பின்னர் விசாரணை ஆரம்பமாகிறது. அப்போது மனோஜ் தரப்பில் ஆஜரான வக்கீல், ரோகிணி என்னென்ன பொய் சொல்லி மனோஜை கல்யாணம் பண்ணினார் என்பதை விவரமாக எடுத்து சொல்கிறார்.
பின்னர் இந்த விஷயம் யார் மூலமாக தெரியவந்தது என ஜட்ஜ் கேட்க, முத்துவும் மீனாவும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். இவர்கள் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் சொல்ல, பின்னர் ரோகிணியிடம் நீ சீட்டிங் பண்ணி தான் மனோஜை கல்யாணம் பண்ணுனியா என கேட்க, அவரும் ஆமாம் என ஒத்துக் கொள்கிறார். ஆனால் மனோஜுக்கு நான் டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? ரோகிணி என்னவெல்லாம் டிராமா போடப் போகிறார்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் விரிவாக தெரியவரும்.