விஜயாவை நடுத்தெருவுக்கு கொண்டுவரப்போகும் ரோகிணி... சிறகடிக்க ஆசை சீரியலில் தரமான சம்பவம் வெயிட்டிங்

Published : Jan 22, 2026, 03:47 PM IST

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய உண்மைகள் ஒட்டுமொத்தமாக வெளிவந்த நிலையில், தற்போது அவர் பழிவாங்கும் மனநிலைக்கு சென்றிருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Most awaited Twist in Siragadikka aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் தொடர்ந்து பல்வேறு ஃபிராடு வேலைகளை செய்து வந்த ரோகிணி, எப்போ வீட்டில் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரோகிணி பற்றிய உண்மைகள் எல்லாம் மீனாவுக்கு தெரியவந்ததை அடுத்து, அனைவருக்கும் அது தெரிந்துவிடும் என எதிர்பார்த்த நிலையில், மீனாவையே எமோஷனல் பிளாக்மெயில் செய்து உண்மையை வெளியே சொல்ல விடாமல் தடுத்துவிட்டார் ரோகிணி. மீனாவிடம் வேண்டுமானால் ரோகிணியின் பாட்சா பலிக்கும், ஆனால் முத்துவுக்கு தெரிந்த பின் அவர் சும்மா இருப்பாரா என்ன, எல்லா உண்மைகளையும் போட்டுடைத்துவிட்டார்.

24
சொதப்பிய ரோகிணி பிளான்

இதையடுத்து ரோகிணியை வீட்டை விட்டே அடித்து துரத்திய விஜயா, இனி மனோஜுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை என சொல்லிவிட்டு, தன் மகனுக்கு டைவர்ஸ் வாங்கும் வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். இந்த வேளையில் மீனாவின் தோழிகள் ரோகிணி மீது இருந்த கடுப்பில் அவரை கடத்திச் சென்று அடிவெளுத்திருக்கிறார். அடிவாங்கிய கையோடு, போலீஸிடம் சென்று புகார் அளித்த ரோகிணி, முத்துவும் மீனாவும் தான் தன்னை தாக்கியதாக சொல்ல, போலீஸும் ரோகிணி பொய் சொல்கிறார் என்பதை கண்டுபிடித்துவிட்டது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார் ரோகிணி.

34
பழிவாங்க துடிக்கும் ரோகிணி

மனோஜை என்னிடம் இருந்து பிரிக்கணும்னு யாராச்சும் நினைச்சா அவங்களை சும்மா விடமாட்டேன். இது ரோகிணியா சொல்லல, தன்னுடைய சுயநலத்துக்காக எதையும் செய்யத் துணியும் கல்யாணியா சொல்றேன் என பன்ச் டயலாக்கெல்லாம் பேசி முத்து - மீனாவிடம் சவால் விட்டிருக்கிறார். தற்போது ரோகிணியின் அடுத்த டார்கெட் விஜயா தான். அவர் தான் மனோஜுக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறார். அவரை சிந்தாமணி உடன் சேர்த்து பிரச்சனையில் சிக்க வைக்கப் போகிறார் ரோகிணி. மனோஜ் கடன் வாங்கிய பைனான்சியரும் சிந்தாமணியும் கூட்டுக் களவாணிகள் தான்.

44
காத்திருக்கும் தரமான சம்பவம்

மனோஜுக்காக விஜயா சாட்சி கையெழுத்து வேற போட்டிருப்பதால், அதை வைத்தே அவரின் சொத்துக்கள் முழுவதையும் ஆட்டையப் போட்டு விடலாம் என பிளான் போட்டு இருக்கிறார் சிந்தாமணி. இதற்கு ரோகிணியை தான் அவர் பகடைக் காயாக பயன்படுத்த இருக்கிறார். இதன்மூலம் விஜயா விரைவில் நடுத்தெருவுக்கு வரப்போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதன்பின்னர் மனோஜை தன்னுடன் சேர்த்து வைத்தால், உங்கள் சொத்தை மீட்க உதவுகிறேன் என விஜயாவிடமே ரோகிணி டீல் பேச வாய்ப்பு உள்ளது. அதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories