'சிறகடிக்க ஆசை' தொடர் மூன்று ஆண்டு வெற்றியை கொண்டாடி வருகிறது. திரையில் விவாகரத்து வழக்கு பரபரப்பாக சென்றுகொண்டிருக்க, திரைக்குப் பின்னால் நடிகர்கள் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கொண்டாட்ட மூடில் ‘சிறகடிக்க ஆசை’ டீம்! வைரலாகும் டான்ஸ் வீடியோ
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே ரசிகர்களின் நினைவில் உடனே வந்து நிற்கும் பெயர்களில் ஒன்று ‘சிறகடிக்க ஆசை’. குடும்ப உறவுகள், உணர்ச்சிப் போராட்டங்கள், திருப்பங்கள் நிறைந்த கதைக்களம் என கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தொடர் டிஆர்பி பட்டியலில் தன் இடத்தை உறுதியாகப் பிடித்திருக்கிறது.
26
கதையில் பரபரப்பு… ரசிகர்களில் ஆர்வம்
சமீப காலமாக ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் கதையில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. ரோஹினியின் முதல் திருமணம் குறித்த மறைந்திருந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும், குடும்பத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. விஜயாவின் கோபம், வீட்டைவிட்டு வெளியேற்றம், விவாகரத்து முயற்சி என ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்களை திரைக்கு கட்டிப்போடும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.
36
விவாகரத்து வழக்கு… சாட்சிகளாக முத்து–மீனா
தற்போதைய எபிசோடுகளில் விவாகரத்து வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நீதிமன்றத்தில் ரோஹினி தன் பக்கம் நியாயம் இருப்பதை வலுவாக வாதிட, முத்து–மீனா சாட்சிகளாக முன்னிலையாகும் காட்சிகள் கதைக்கு கூடுதல் வேகம் கொடுத்துள்ளன. “அடுத்து என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது.
திரையில் இவ்வளவு பரபரப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில், திரைக்குப் பின்னால் முழுக்க கொண்டாட்டம் தான்! ‘சிறகடிக்க ஆசை’ தொடர் மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவதைக் கொண்டாடும் விதமாக, சீரியல் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.
56
வைரலான டான்ஸ் வீடியோ
இந்த கொண்டாட்ட தருணத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இயல்பான சிரிப்பு, குஷி, நட்புணர்வு நிறைந்த அந்த டான்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. திரையில் தீவிரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை, நிஜ வாழ்க்கையில் இவ்வளவு கலகலப்பாக பார்க்க ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
“எங்கள் ஆதரவால் தான் இந்த வெற்றி” என்பதை உணர்த்தும் விதமாக நடிகர்கள் இந்த கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். “சிறகடிக்க ஆசை குடும்பம் போல தான்”, “ரியல் லைஃபில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்க” என ரசிகர்கள் கமெண்ட்களில் அன்பை பொழிந்து வருகின்றனர்.
66
தொடரும் வெற்றிப் பயணம்
கதையில் பரபரப்பு, திரைக்குப் பின்னால் கொண்டாட்டம் என ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது இரட்டை சந்தோஷத்தில் பயணித்து வருகிறது. வரும் நாட்களில் கதையில் இன்னும் என்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன, இந்த வெற்றிப் பயணம் எங்கே வரை நீளும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.