கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த ரோகிணி.. மயக்கம்போட்டு விழுந்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சூப்பர் ட்விஸ்ட்

Published : Jan 24, 2026, 09:40 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னைப் பற்றிய உண்மைகள் மனோஜுக்கு கல்யாணத்துக்கு முன்பே தெரியும் என கோர்ட்டில் சொல்லி ட்விஸ்ட் கொடுத்துள்ளார் ரோகிணி. அதன்பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
16
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் - ரோகிணியின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. இதில் தன் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ள ரோகிணி, தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது, கல்யாணம் ஆன ஆறு மாதத்தில் என்னுடைய முதல் கணவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு குழந்தையும் இருக்கு, இது எல்லாத்தையுமே நான் ஒத்துக்குறேன். ஆனால், இந்த உண்மைகள் எல்லாவற்றையும் நான் ஏற்கனவே மனோஜிடம் சொல்லிவிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடியே இதை அவரிடம் சொல்லிவிட்டேன். அதன் பின்னர் தான் எங்களுக்கு கல்யாணமே நடந்துச்சு என சொல்கிறார்.

26
மயங்கி விழுந்த விஜயா

இப்படி கோர்ட்டில் வாய்க்கூசாமல் ரோகிணி பொய் சொன்னதை கேட்டதும் கோபத்தில் கொதித்தெழுந்த விஜயா, பயங்கரமாக கத்துகிறார். மனோஜும் ரோகிணி இதையெல்லாம் என்கிட்ட சொல்லவே இல்லை என மறுக்கிறார். இதையடுத்து கோர்ட்டில் வாக்குவாதம் செல்கிறது. தான் பேயாக நடித்தபோது நடந்தவற்றை ஒரு சாட்சியாக எடுத்து பேசும் ரோகிணி, நான் கல்யாணி என்கிற உண்மையை உன்கிட்ட சொன்னனா இல்லையா என கேட்க, அதற்கு மனோஜும் ஆமாம் என சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு பிபி எகிறி விஜயா கோர்ட்டிலேயே மயக்கம் போட்டு விழுகிறார். கோர்ட்டில் அசாதாரண சூழல் நிலவியதால் நீதிபதி, இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

36
மனோஜை அடிக்கும் விஜயா

பின்னர் வீட்டுக்கு சென்றதும் விஜயா, மனோஜை துரத்தி துரத்தி அடிக்கிறார். ஏண்டா உனக்கு முன்னாடியே உண்மை தெரிஞ்சும் சொல்லல என விஜயா கேட்க, உண்மையிலேயே அவ என்கிட்ட எதுவும் சொல்லல அம்மா என மனோஜ் சொல்கிறார். பின்னர் ஸ்ருதி மனோஜுக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். நீங்க ரோகிணி போன் பண்ணி பேசுங்க, அப்போது அவ உண்மையா என்ன நடந்ததுனு சொல்லுவா அதை நம்ம ரெக்கார்டு பண்ணி கோர்ட்டில் காட்டிடலாம் என சொல்கிறார். ஆனால் ரோகிணி தான் அல்ரெடி ஃபிராடு ஆச்சே, இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு, போனில் தன் வாயால் எந்த உண்மையையும் சொல்லாமல் மறைக்கிறார்.

46
சிந்தாமணியிடம் உதவி கேட்கும் ரோகிணி

இதையடுத்து ரோகிணி, சிந்தாமணிக்கு போன் போட்டு செலவுக்கு காசு கேட்கிறார். ரோகிணியை போல் சிந்தாமணியும் ஒரு ஃபிராடு தான் என்பதால், அவர் தன்னிடம் காசு இல்லை, இன்னொருவரிடம் வேண்டுமானால் வட்டிக்கு வாங்கி தருகிறேன். நீ அவங்க கிட்ட கட்டிக்கோ என சொல்கிறார். ரோகிணியும் சரினு சொல்ல, தன்னுடைய காசை இன்னொருவர் மூலமாக கொடுத்து அனுப்புகிறார் சிந்தாமணி. இவர் ரோகிணியை வைத்து விஜயாவின் வீட்டை அபகரிக்கலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறார். அது தெரியாமல் சிந்தாமணியை, ரோகிணி மலைபோல் நம்பி வருகிறார்.

56
மீனாவுக்கு கிடைத்த காண்ட்ராக்ட்

சிந்தாமணி பூ காண்டிராக்ட் விஷயமாக கிளம்பிக் கொண்டிருக்க அப்போது அவருடைய மகள் அங்கே வருகிறார். அவரிடம் விஷயத்தை சிந்தாமணி சொல்ல, அதற்கு அவர் மகள், நீ அங்க போனால் நான் உன்கூட பேசவே மாட்டேன் என சொல்ல, சிந்தாமணி மகள் பாசத்தில் அடங்கி அங்கு செல்லும் முடிவை கைவிடுகிறார். இதையடுத்து மீனாவுக்கு போன் போடும் மேனேஜர், சிந்தாமணி போட்டியில் இருந்து விலகியதால், இந்த காண்டிராக்ட் உங்களுக்கு கிடைத்திருப்பதாக சொல்கிறார். இந்த சந்தோஷமான விஷயத்தை மீனா, முத்துவிடம் சொல்ல, அவரும் செம குஷியாகிறார்.

66
நீத்துவை அறைந்த ஸ்ருதி

அந்த நேரத்தில் ஸ்ருதி அழுதுகொண்டே வீட்டுக்கு வருகிறார். பின்னர் என்ன பிரச்சனை என அனைவரும் விசாரிக்க, ரவியை கட்டிப்பிடித்து எடுத்த போட்டோவை ஸ்டேட்டஸாக வைத்து நீத்து, லவ் யூ என போட்டிருப்பதாக சொல்லி அழுகிறார். பின்னர் நீத்துவின் ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார் ஸ்ருதி, அங்கு ரவி பெயர் எழுதப்பட்ட கேக்கை நீத்து வெட்டப் போக, அப்போது அங்கு வரும் ஸ்ருதி, நீத்துவுக்கு பளார் என அறைவிடுகிறார். இதையடுத்து அங்கு வரும் ரவி, ஏன் நீத்து இந்த மாதிரி பண்ணுன என கேட்கையில் அவர் நான் உன்னை விரும்புனேன் என சொல்கிறார். இதைக்கேட்டு கோபமடையும் ஸ்ருதி அங்கிருந்து கிளம்புகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories