ஆதி குணசேகரன் பக்கம் சாயும் சக்தி... ஜனனி எடுக்கப்போகும் முடிவு என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Feb 27, 2026, 11:10 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை எந்த பிசினஸும் செய்யக் கூடாது என முட்டுக் கட்டை போட்டுள்ளார் சக்தி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் தகவல் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த விஷயத்தால் ஜனனிக்கு பிரச்சனையும் உருவாகி உள்ளது. ஜனனி ரொம்ப வீக் ஆக இருப்பதால் அவர் எந்த வேலையும் செய்யக்கூடாது, ஸ்ட்ரெஸ் ஆகக் கூடாது எனவும் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருந்தார் டாக்டர். இதனால் ஜனனியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் சக்தி. ஆனால் ஜனனி, அடிக்கடி தனக்கு நடந்த கொடுமைகளை நினைத்து ஃபீல் பண்ணுவது சக்தியை மேலும் கோபமடையச் செய்து வருகின்றது.

25
ஜனனி - சக்தி வாக்குவாதம்

இது போதாதென்று, ஜனனியின் தமிழ் சோறு பிசினஸை மீண்டும் தொடங்க ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. இதுதொடர்பாக பேச தொழிலதிபர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் நான் செய்து கொடுக்கிறேன். நீங்கள் மீண்டும் சமையல் தொழிலை தொடங்க வேண்டும் என கூறுகிறார். இதைக்கேட்டதும் சந்தோஷமடைந்த ஜனனி, மீண்டும் பிசினஸை தொடங்க முனைப்பு காட்ட, அதற்கு சக்தி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். வந்திருந்தவர்களை தயவு செஞ்சு கிளம்பி போங்க என மூஞ்சில் அடித்தார் போல் சொல்லி விரட்டி விட்டுள்ளார்.

35
சக்திக்கு ஸ்கெட்ச் போடும் கதிர்

இதையடுத்து மாடிக்கு அழைத்து சென்று இருவருக்கும் இடையே பஞ்சாயத்து பண்ணுகிறார்கள் ரேணுகா மற்றும் நந்தினி. ஆனால் அவர்களிடமும் கோபமாக பேசுகிறார் சக்தி. பின்னர் ஜனனியை தனியே அழைத்து சென்று, அவன் குழந்தை மீதுள்ள பாசத்தில் தான் இப்படியெல்லாம் பேசுகிறான். நீ எதையும் மனதில் வச்சுக்காத என கூறி ஜனனியை சமாதானப்படுத்துகிறார்கள். சக்தி, ஜனனி மீது கோபத்தில் இருப்பதால் அவனை எப்படியாது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என கதிரும், ஞானமும் முடிவெடுத்து அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்கள்.

45
ஞானத்துக்கு பதிலடி கொடுத்த ரேணுகா

சக்தியிடம் பேசும் கதிர், என்கிட்ட ஒரு காலத்துல கேள்வியா கேட்டுட்டு இருந்தேல்ல, உனக்குனு பர்சனலா ஒரு வாழ்க்கை இல்லையானு கேட்டேல்ல, அதையே நீயும் கொஞ்சம் யோசி என ஏத்திவிடுகிறார் கதிர், இதன்பின்னர் ஜனனியை சாப்பிடுவதற்காக கிச்சனுக்குள் ரேணுகா அழைத்துச் செல்ல, அப்போது டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ஞானம், அதான் இங்க இத்தனை டேபிள் இருக்குல்ல, அப்புறம் ஏன் உள்ள கூட்டிட்டு போற என கேட்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் ரேணுகா, இவளோ நாள் இந்த சேர்ல உட்கார்ந்து தான் சாப்பிட்டோமா, வாயை மூடிட்டு உங்க வேலையை பாருங்க என சொல்லிவிட்டு செல்கிறார்.

55
பாசமழை பொழிந்த ஜனனியின் தந்தை

தன் மகள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அறிந்த ஜனனியின் தந்தை நாச்சியப்பன் அவரை பார்க்க வீட்டுக்கு வந்திருக்கிறார். வந்த கையோடு மகளிடம் பாசமழை பொழியும் நாச்சியப்பன், என்னால் உனக்கு எதுவுமே செய்ய முடியலை என சொல்லி ஃபீல் பண்ணுகிறார். அதோடு தான் கஷ்டப்படும் விஷயத்தையும் கூறுகிறார். இறுதியாக சக்தியிடம் என்னோட பொண்ணை பத்திரமாக பார்த்துக் கோங்க மாப்பிள்ள என சொல்லிவிட்டு கிளம்புகிறார். ஜனனியிடமும் மாப்பிள்ளை சொல்லுறபடி கேளு என புத்திமதி கூறிவிட்டு செல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories