சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் ஒன்று. இந்த சீரியல் தொடங்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிறது. இதற்கு ஆரம்பத்தில் பெரியளவில் வரவேற்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது தடபுடலான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இதன் எதிரொலியாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக கடந்த வாரம் இந்த சீரியலுக்கு 8.90 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருந்தன. இந்த நிலையில், இந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் சிலர் சமீபகாலமாக எந்த எபிசோடிலும் தலைகாட்டாமல் இருக்கின்றனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
24
ஒரு குடும்பத்தையே காணோம்
எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய தூணாக இருந்தது அதில் நடித்த நான்கு நாயகிகள் தான். அதில் முதல் சீசனில் ஜனனியாக நடித்த மதுமிதா விலகியதை அடுத்து அவருக்கு பதில் பார்வதி தற்போது அந்த கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் இந்த சீரியலில் ஈஸ்வரியாக கனிகாவும், நந்தினியாக ஹரிப்பிரியாவும், ரேணுகாவாக பிரியதர்ஷினியும் தொடர்ந்து நடித்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக ரேணுகா கதாபாத்திரத்தை காணவில்லை. அதேபோல் அவரின் மகளாக நடிக்கும் ஐஸ்வர்யாவும் இடம்பெறவில்லை. இதுதவிர ரேணுகாவின் கணவராக ஞானம் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமலேஷும் கடந்த சில வாரங்களாக எந்த எபிசோடிலும் இடம்பெறவில்லை. இப்படி ஒரு குடும்பத்தையே காணவில்லையே என ரசிகர்கள் வலைவீசி தேடுகிறார்கள்.
34
சக்தி விலகிவிட்டாரா?
அதேபோல் இந்த சீரியலின் நாயகி ஜனனியின் கணவரான சக்திவேலும் கடந்த சில வாரங்களாக ஆள் அட்ரஸே இல்லாமல் இருக்கிறார். அந்த கேரக்டரில் சபரி நடித்து வருகிறார். முதல் சீசனில் இவருக்கு இருந்த ஸ்கோப், இரண்டாவது சீசனில் இல்லை. இதனால் அவர் எதிர்நீச்சல் சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. சீரியலிலும் அவர் தொடர்ந்து ஆப்செண்ட் ஆகி வருவதால், உண்மையிலேயே அவர் விலகிவிட்டாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. அவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபற்றி எந்த ஒரு அப்டேட்டையும் கொடுக்காமல் உள்ளார்.
அதேபோல் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யா தேவராஜன் மற்றும் ஜான்சி ராணியாக நடித்த காயத்ரி கேரக்டரையும் சுத்தமாக ஒதுக்கிவிட்டார்கள். முதல் சீசனில் ஜான்சி ராணி வில்லியாக இருந்ததை போல் இந்த சீசனில் அறிவுக்கரசி என்கிற கேரக்டரை கொண்டுவந்திருக்கிறார்கள். இப்படி நிறைய கதாபாத்திரங்கள் மிஸ் ஆவதால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இதற்கெல்லாம் விடை ஆதி குணசேகரனின் மகன் தர்ஷன் திருமண எபிசோடில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.