விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி பணம் கேட்டு பிளாக்மெயில் செய்ததால், மனோஜிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வாங்கி கொடுத்துள்ளார் ரோகிணி.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் ஸ்கூட்டரை தூக்கியதற்காக 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு முத்து, சிந்தாமணியை மிரட்ட, அவர் வேறுவழியின்றி ரோகிணியிடம் அந்த பணத்தை கேட்டு பிளாக்மெயில் செய்கிறார். நீ அந்த பணத்தை கொடுக்காவிட்டால் நீ தான் இதெல்லாம் பண்ண சொன்னது என சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறார் சிந்தாமணி. இதனால் வேறுவழியின்றி பணத்தை கொடுக்க சம்மதிக்கிறார் ரோகிணி. மனோஜிடம் தன்னுடைய தோழிக்கு மொய் செய்ய வேண்டும் எனக்கூறி 50 ஆயிரம் பணத்தை வாங்கிச் செல்லும் ரோகிணி, அதை சிந்தாமணியிடம் கொடுத்துவிடுகிறார்.
24
ரோகிணியிடம் பணம் வாங்கிய சிந்தாமணி
அப்போது சிந்தாமணியிடம், என்ன ஆண்ட்டி நீங்க சொன்ன வேலையை முழுசா முடிக்கவே இல்ல என கேட்கிறார் ரோகிணி. அதற்கு அவர், முத்து கார் ஓட்டுபவன் என்பதால் அவனுக்கு நிறைய இடத்தில் பழக்கம் இருக்கு, அதனால தான் சீக்கிரம் கண்டுபிடிச்சுட்டான் என சொல்கிறார். பின்னர் முத்துவிடம் சென்று பணத்தை கொடுக்கிறார் சிந்தாமணி. அப்போது மீனாவை தன்னுடைய எதிரி என சொல்லவே வெட்கமாக இருப்பதாகவும், அவளை இந்த தொழிலை விட்டே ஓட வைக்கிறேன் பாரு என சவால் விடுகிறார் சிந்தாமணி. அவரிடம் இருந்து காசை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறார் முத்து.
34
முத்துவுக்கு சவால்விட்ட சிந்தாமணி
பின்னர் வீட்டில் மீனாவிடம் நடந்ததை கூறுகிறார் முத்து. அதுமட்டுமின்றி அவருக்கு புது வண்டி வாங்கித் தருவதாகவும் சொல்கிறார். உடனே அண்ணாமலை, தானும் அதற்காக 15 ஆயிரம் பணம் தருவதாக சொல்கிறார். ஸ்ருதியும், ரவியும், நல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி கொடுக்குமாறு முத்துவிடம் சொல்கிறார்கள். ஆனால் மீனா, தனக்கு வண்டியெல்லாம் வேண்டாம், அந்த பணத்தை வைத்து பூக்கடை போடப் போவதாக கூறுகிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் முத்து, நீ பூ டெலிவெரி செய்வதால் தான் உனக்கு நல்ல நல்ல ஆர்டர்கள் வருகிறது. அதையே தொடர்ந்து செய்யுமாறு கூறுகிறார்.
மீனாவுக்கு 15 ஆயிரம் தருவதாக சொன்ன அண்ணாமலையிடம் தனக்கும் பணம் தருமாறு விஜயா கேட்கிறார். அப்போது அவர் இல்லை என சொன்னதும் மனோஜிடம் தனக்கு பணம் தருமாறு கேட்கிறார். அப்போது தான் ரோகிணி தன்னிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிய விஷயத்தை உலறிவிடுகிறார் மனோஜ். இதைக் கேட்டு ஷாக் ஆன விஜயா, உனக்கு எதுக்கு 50 ஆயிரம் என துறுவி துறுவி கேட்கிறார். இதனால் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரோகிணி, விஜயாவிடம் என்ன சொல்லி தப்பிக்கப்போகிறார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.