அறிவுக்கரசி அரெஸ்ட் ஆனதும் ஆட்டத்தை ஆரம்பித்த அன்புக்கரசி; தர்ஷன் திருமணத்தில் கலாட்டா - எதிர்நீச்சல் 2

Published : Oct 08, 2025, 09:16 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனின் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட ஜனனி, தர்ஷன் - பார்கவி திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்து இருக்கிறார்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ், அறிவுக்கரசியை கொலை கேசில் கைது செய்ய வந்திருந்தனர். அப்போது குணசேகரனை ரூமுக்குள் அழைத்து சென்று அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தன்னிடம் இருப்பதாக சொன்ன அறிவுக்கரசி, அதற்காக தான் கெவினை கொலை செய்ததாக ஒப்புக் கொள்கிறார். தன்னை இத்தனை நாட்களாக ஏமாற்றியதால் கடுப்பான ஆதி குணசேகரன், அறிவுக்கரசியை அழைத்துச் செல்லுமாறு போலீசிடம் கூறினார். இதைக்கேட்டு டென்ஷனான அறிவுக்கரசி, ஆதி குணசேகரனையே அடிக்க பாய்ந்தார்.

25
காலில் விழுந்து கதறிய அறிவுக்கரசி

பின்னர் போலீஸிடம் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அறிவுக்கரசி, தயவு செய்து தன்னுடைய தங்கச்சி திருமணத்தை நடத்தி முடிக்குமாறு கெஞ்சினார். ஆதி குணசேகரன் காலில் விழுந்து கதறினார். இதற்கெல்லாம் அவர் செவிசாய்க்கவில்லை. பின்னர் தர்ஷன் காலிலும் விழுந்தார். அவர் பார்கவியை தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறிவிட்டார். இனி அவளுக்கும் இந்த வீட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஆதி குணசேகரன் சொன்னதோடு, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் இங்கு கல்யாணம் நடக்க இருந்ததாக ஒரு சொல்லை விட்டுவிட்டார்.

35
தோற்றுப்போன ஆதி குணசேகரன்

இதைப் பிடித்துக் கொண்ட ஜனனி, போலீஸிடம், அவர் சொன்னபடி, தர்ஷனுக்கும், பார்கவிக்கும் கல்யாணத்தை நடத்திக் கொடுக்குமாறு கேட்க, குணசேகரன் ஷாக் ஆகிறார். பின்னர் அவரை ரூமுக்குள் அழைத்து சென்று, டீலிங் பேசும் ஜனனி, அவர் ஈஸ்வரியை தாக்கியதற்கான ஆதாரம், அடங்கிய போன் தன்னிடம் இருப்பதாக அதைக் காட்டி மிரட்டுகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழித்த ஆதி குணசேகரன், தலை குணிந்தபடி தன்னுடைய தம்பிகளுடன் மண்டபத்தில் இருந்து வெளியேறுகிறார்.

45
தர்ஷன் - பார்கவி கல்யாணம்

குணசேகரன் சென்ற பின்னர் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமண நடக்கிறது. இதைப்பார்த்து கடுப்பான அன்புக்கரசி, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்திருவீங்களா.. உங்களை சும்மா விடமாட்டேன் என சாபம் விடுகிறார். ஜனனியிடம் தோற்ற பின் வீட்டிற்கு சென்ற ஆதி குணசேகரன், அங்குள்ள மீனாட்சியின் போட்டோவை பார்த்து, அவளை ஜெயிக்க வச்சு என்னை தோற்கடிச்சிருக்க என தன் ஆதங்கத்தை கொட்டுகிறார்.

55
கொக்கரிக்கும் ஞானம்

தர்ஷன் - பார்கவி திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஜனனி, அவர்களை கோவிலுக்கு அழைத்து சென்று அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர், நாம குணசேகரனுக்கும் அவருடைய தம்பிகளுக்கும் கொடுக்க நினைத்த தண்டனை இன்னும் முடியவில்லை என கூறுகிறார். மறுபுறம் வீட்டில் உள்ள ஞானம், இத்தனை வருஷமா உங்க கையால சோத்தை தின்னதுக்கு இன்னைக்கு நான் அந்த நன்றியை காட்டுறேன் அண்ணே என கோபத்தில் கொக்கரிக்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories