தர்பூசணி திவாகரை அடிக்க பாய்ந்த ரம்யா ஜோ... கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

Published : Oct 07, 2025, 10:07 AM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உடன் சக போட்டியாளரான ரம்யா ஜோ வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
Ramya Joo Fight With Diwakar in Bigg Boss House

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. சண்டை போட்டால் புரோமோவில் வந்துவிடலாம் என்கிற மனநிலையும் போட்டியாளர்கள் இடையே கடந்த சில சீசன்களாக இருக்கிறது. அதே டிரெண்டை தான் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களும் பாலோ செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தான் எப்படியாவது பேமஸ் ஆக வேண்டும் என்கிற வெறியோடு சுற்றும் திவாகரும் உள்ளே சென்றுள்ளதால், அவர் சண்டைபோடுவதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். வந்த முதல் நாளில் இருந்தே சண்டை போட்டி வருகிறார்.

24
அலப்பறை செய்யும் திவாகர்

திவாகர் ஒரு பிசியோதெரபி மருத்துவர். இது அரசால் அங்கீகரிக்கப்படாதது அதனால் இவர் மருத்துவரெல்லாம் இல்லை என்பது போல் கெமி பேசி இருந்தார். அதற்காக கெமி உடன் சண்டை போட்டார் திவாகர். அதுமட்டுமின்றி அங்கு உள்ளவர்களெல்லாம் நடிகர்கள், விஜே, ஆர்ஜே, அவர்கள் எல்லாம் பல ஆண்டுகளில் வாங்கிய பெயரையும், புகழையும் தான் ஒரே ஆண்டில் சம்பாதித்துவிட்டதாக தற்பெருமை பேசி அங்கிருக்கும் போட்டியாளர்களே இவரைப் பார்த்து அலறி ஓடுகிறார்கள். அந்த அளவுக்கு அலப்பறை செய்து வருகிறார் திவாகர்.

34
ரம்யா ஜோ உடன் சண்டைபோட்ட திவாகர்

இந்த நிலையில், இன்றைய எபிசோடில் ரம்யா ஜோ உடன் சண்டை போட்டுள்ளார் திவாகர், கெமி இவர் விஷயத்தில் எதுவும் சொல்லக்கூடாது, பிரவீன் அண்ணாவும் எதுவும் சொல்லக்கூடாது ஆனால் இவர் மட்டும் எல்லா விஷயத்திலும் மூக்கைவிட்டு, இது தப்புனு சொல்வாரு என பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் இருந்த திவாகர், ஏய் சொல்றதை கேளுமா என சவுண்டு விடுகிறார். இதனால் கடுப்பான ரம்யா ஜோ, கத்துற வேலையெல்லாம் இங்க வச்சிக்க கூடாது என்ன என எகிறுகிறார்.

44
படிப்பால் வெடித்த பிரச்சனை

இதற்கு திவாகர், ஏய் மரியாதையா பேசுமா... படிச்சிருக்கியா, படிக்கலையா நீ... நாகரீகம் தெரியுமா உனக்கு என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார். திவாகர் படிப்பை பற்றி பேசியதால் சக போட்டியாளர்களும் ரம்யா ஜோவுக்கு சப்போர்ட்டுக்கு வந்து, படிப்பு பத்தி கேக்குறீங்கள்ல நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா என கம்ருதீன், எஃப்.ஜே ஆகியோர் திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் கப்சிப்னு ஆகிறார் திவாகர். படிப்பு குறித்த இந்த பிரச்சனையால் இன்றைய எபிசோடில் நிச்சயம் மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories