Revathi is Operation Theater : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ரேவதிக்கு ஆபரேஷன் நடக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்த மாயா பவர்கட் செய்துள்ளார். இதனால், ரேவதிக்கு ஆபரேஷன் தடைபட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கும் ரேவதிக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று மாரி கூறுகிறார். அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். ரோகிணி ஃப்ரண்ட் தான் மாரி. அவர் தான் இப்போது ரேவதிக்கு இரத்தம் கொடுக்க வந்து கொண்டிருக்கிறார்.
ரேவதி உயிருடன் இருப்பது சந்திரகலா மூலமாக மாயாவிற்கு தெரிய வருகிறது. நான் மட்டும் என்னுடைய மகேஷை பிரிந்திருக்கும் சூழல் நீ மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி ரேவதியை துப்பாக்கியால் சுட்டு தள்ளியவர் தான் மாயா. இப்போது அவர் உயிருடன் இருப்பது தெரிந்து மாறுவேடத்தில் மருத்துவனைக்கு வந்துள்ளார். அங்கு ரேவதி அறைக்கு சென்ற மாயா, அவரை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மனின் தீவிர பக்தையாக இருக்கும் மாரிக்கு தெரிய வருகிறது. இதைப் பற்றி உங்களது மனைவி உயிருக்கு ஆபத்து என்று மட்டும் கார்த்திக்கிடம் கூறுகிறார். இதைத் தொடர்ந்து கார்த்திக் தனது மாமியார் சாமுண்டீஸ்வரியிடம் பேச அவரும் ஐசியூ ரூமுக்கு சென்று நர்சிடம் இனிமேல் யாரையும் உள்ளே விடக் கூடாது என்று கூறினார். பின்னர் மாரியுடன் மருத்துவமனைக்கு வந்த கார்த்திக், ரத்தம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
மாரிக்கு எல்லா டெஸ்டும் எடுத்த பிறகு இரத்தம் எடுக்கப்பட்டது. அப்போதும் கூட மாயா தனது வேலையை காட்டினார். மாரிக்கு கொடுக்கப்பட்ட ஜூஸில் சரக்கு கலந்து கொடுத்தார். ஆனால், அதனை மாரி குடிக்கவே இல்லை. ஒருவழியாக ரத்தம் கொடுத்துவிட்டு மாரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் ரேவதிக்கு ஆபரேஷன் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
45
ரேவதியை கொல்ல முயற்சித்த மாயா
இதை தொடர்ந்து இன்றைக்கான எபிசோடில் டாக்டர் ஆபரேஷன் செய்ய தொடங்கும் போது எப்படியாவது ரேவதியை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மாயா கரெக்ட்டாக பவர் கட் செய்துள்ளார். இதனால், ஆபரேஷன் தியேட்டரிலிருந்த மருத்துவர்கள் பதறினர். உடனே டாக்டர் போய் ஜெனரேட்டர் ஆன் பண்ணுங்க என்று சொல்ல அதற்கு அருகில் இருந்த மற்ற டாக்டர் இன்று தான் ஜெனரேட்டர் ரிப்பேர் ஆச்சு அதனால் இன்று மாலை தான் சரியாகும் என்று சொல்கிறார். அதற்கு டாக்டர் என்ன எப்படி பொறுப்பு இல்லாமல் சொல்றிங்க என்று டென்ஷன் ஆகிறார்.
55
ரேவதிக்கு ஆபரேஷன்
இது குறித்து டாக்டர் வெளியில் வந்து கார்த்திக்கிடம் சொல்ல, அவரோ ஜெனரேட்டர் இப்போ வந்துவிடும் என்று சொல்லி முடிப்பதற்குள்ளாக கரண்ட் வந்துவிடுகிறது. அதன் பின்னர் ரேவதிக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று டாக்டர் கார்த்திக்கிடம் கூறினார். மேலும், ரேவதி உடம்பிலிருந்த புல்லட் எடுத்தாச்சு. இனி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினார். இதையெல்லாம் மறைந்து நின்று கொண்டிருந்த மாயா பார்த்துக் கொண்டிருந்தார். அதோடு, இன்றைய எபிசோடு முடிகிறது. இனி என்ன நடக்கிறது என்பது பற்றி இன்றை எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.