மனோஜிக்கும் ராணிக்கும் கல்யாணம்? சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து போடும் மாஸ்டர் பிளான்

Published : Sep 29, 2025, 09:13 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ராணியிடம் தப்பாக நடந்துகொண்ட விஷயம் முத்துவுக்கு தெரியவந்ததை அடுத்து அவர் ராணியை வீட்டுக்கே அழைத்து வந்து பஞ்சாயத்து செய்துள்ளார்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னை ஏமாற்றி பிளாக்மெயில் செய்து வந்த ராணியை மிரட்டும் விதமாக அவரது வீட்டுக்கே சென்று அவரிடம் தப்பாக நடந்துகொள்ள வந்திருப்பதாக மனோஜ் கூறியதை அடுத்து, அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்ததால், அவர்கள் வந்து மனோஜை அடிவெளுத்தனர். பின்னர் காயங்களுடன் வீட்டுக்கு வந்த மனோஜ், வீட்டில் இருப்பவர்களிடம் தான் ஒருவனை அடித்ததாகவும் அப்போது தனக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் பில்டப் விட்டார். பின்னர் ரோகிணியிடம் மட்டும் நடந்த உண்மையை கூறி இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
முத்துவுக்கு தெரியவரும் உண்மை

மனோஜ் பொய் சொல்கிறான் என்பதை கண்டுபிடித்த முத்து, அவன் ராணியிடம் அடிவாங்கியது தெரிந்து, ராணி வீட்டுக்கே செல்கிறான். அங்கு ராணியையும் ராஜாவையும் சந்தித்து, என் அண்ணன் மனோஜ், வேலை செய்யுற பொண்ணுகிட்டயே தப்பா நடந்துக்க பாத்திருக்கான், எவ்ளோ பெரிய தப்பு இது, இதை இப்படியே விட்டு விடக் கூடாது. இவ்ளோ பண்ணிட்டு நல்லவன் மாதிரி நடிச்சுட்டு இருக்கான். அவனைப்பத்தி என் அப்பா, அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும், நீங்க வீட்டுக்கு வந்து உண்மையை சொல்லுங்க என ராணியை அழைக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் வர மறுக்கிறார்கள்.

34
ராணியை மிரட்டும் முத்து

குறிப்பாக ராணி, எதுக்குங்க தேவையில்லாம, பாவம் ஏதோ தப்பு பண்ணிட்டாரு விட்றுங்க என சொல்கிறார். இதற்கு முத்து, என்னம்மா நீ உன்கிட்ட தப்பா நடந்துக்க பாத்திருக்கான் அவனபோய் பாவம்னு சொல்லிட்டு இருக்க. நீ கல்யாணம் பண்ணி உன் புருஷன் கூட வாழ்ந்துட்டு இருக்க, உன்கிட்ட போய் அவன் தப்பா நடந்திருக்கான், இந்த மாதிரி விஷயத்துல பொண்ணுங்க பொய்யே சொல்ல மாட்டாங்க. நீங்க என்கூட வாங்க இன்னைக்கு நமக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும். உனக்கான நியாயத்தை நான் வாங்கித் தரேன். இன்னைக்கு போலீசை வரவச்சு அவனை ஜெயிலுக்கு அனுப்பிடுவோம்னு முத்து சொல்ல, அதற்கு ராணியும், ராஜாவும் வரமறுக்கிறார்கள். நாங்க எதுக்கு வரணும்னு ராஜா கேட்க, எதுக்கு என்னணு கேள்வி கேட்டுட்டு இருந்தேனா டேமேஜ் பலமா இருக்கும்னு முத்து மிரட்டியதால், இருவரும் வர சம்மதிக்கிறார்கள்.

44
மனோஜ் - ராணிக்கு கல்யாணம்?

பின்னர் வீட்டுக்கு வரும் முத்து, மனோஜை அழைத்து அனைவர் முன்னிலையிலும் உண்மையை சொல்கிறார். ராணி தனியா இருக்கும் போது அவளிடம் தப்பா நடந்துக்க பார்த்திருக்கிறான். அதான் அக்கம்பக்கத்து ஆளுங்க வந்து அவனை வெளுத்திருக்காங்க. வீட்டில் உள்ள அனைவரும் மனோஜை திட்ட, அதற்கு அவர், தப்பா நடந்துக்கல, உண்மையை சொல்ல வைப்பதற்காக அப்படி நடந்துகொண்டேன் என கூறுகிறார். பொண்ணுகிட்ட தப்பா நடக்க முயன்றதற்காக மனோஜுக்கு தண்டனை கொடுக்கணும் என சொல்லும் முத்து, அவனை ராணி கழுத்தில் தாலிகட்ட சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories