ஆனால் ராஜீக்கு கடைசி வரை இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமில்லை. இது ஒரு புறம் இருக்க தனது பேரனுக்காக காந்திமதி தனது மகள் கோமதியை தனியாக அழைத்து அவரிடம் அரசி கொடுத்த கேஸை வாபஸ் பெற வேண்டும் என்றார். மேலும், கோமதியை தனியாக கோயிலுக்கு அழைத்து பேசினார்.
இறுதியாக இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன். திறமைக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும் என்று இங்கு வந்தேன். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இனிமேல் யார் தடுத்தாலும் நான் இங்கு இருக்கமாட்டேன் என்று கூறிய ராஜீ தனது லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு குன்னக்குடிக்கு கிளம்பினார். ஆனால், நடுவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார். சரி, நீ போக வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் பணத்தை கட்டி விட்டு இங்கிருந்து போ என்று கூறுவதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.