சினிமாவில் இரண்டு படங்களுக்கு இடையே கனெக்ஷன் உருவாக்கி அதை ஒரே யூனிவர்ஸுக்குள் கொண்டு வருவது சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எல்.சி.யு என்கிற யூனிவர்ஸை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல் மலையாளத்தில் சமீபத்தில் லோகா யூனிவர்ஸ் தொடங்கப்பட்டது. சினிமாவுக்கு நிகராக சின்னத்திரையிலும் இரண்டு சீரியல்கள் இணைந்து ஒரே கதைக்களத்தில் பயணிப்பது போன்று உருவாக்கி வந்தனர். மகா சங்கமம் என்கிற பெயரில் இரு சீரியல்களை ஒன்றிணைத்து இதுவரை ஒளிபரப்பி வந்த நிலையில், தற்போது அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது சன் டிவி.
24
மெகா சங்கமம்
அந்த வகையில் ஒரே நேரத்தில் மூன்று சீரியல்களை ஒன்றிணைத்து மெகா சங்கமம் ஆக ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி. அதன்படி அன்னம், கயல் மற்றும் மருமகள் ஆகிய மூன்று சீரியல்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் மெகா சங்கமம் ஆக ஒளிபரப்பாக உள்ளது. மூன்று சீரியல்களும் ஒரே கதைக்களத்தில் இணைந்து பயணிக்க உள்ளதால் அதனைக் காண ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். முதன்முறையாக சன் டிவியில் மூன்று சீரியல்கள் மெகா சங்கமம் ஆக ஒளிபரப்பாக உள்ளதால், இதற்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்து மற்ற சீரியல்களிலும் இதை செயல்படுத்த காத்திருக்கிறதாம் சன் டிவி.
34
ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகும் சீரியல்
மெகா சங்கமத்தால் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அன்னம், மருமகள், கயல் சீரியல்களின் மெகா சங்கமம் சுமார் ஒன்றரை மணிநேரம் நான் ஸ்டாப் ஆக ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு தினந்தோறும் சினிமா பார்க்கும் ஃபீலை கொடுக்க உள்ளது சன் டிவி. இதற்கு முன்னர் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு ஆகிய சீரியல்கள் இணைந்த மகா சங்கமம் ஹிட்டானதோடு, அது டிஆர்பியிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியது. தற்போது முதன்முறையாக மூன்று சீரியல்கள் ஒன்றிணையும் மெகா சங்கமமும் ஹிட் ஆனால், இத்தனை நாள் முதலிடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியலுக்கு ஆப்பு கன்பார்ம்.
சன் டிவியில் கடந்த சில வாரங்களாக மருமகள் மற்றும் அன்னம் சீரியல்களின் டிஆர்பி சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. அதேபோல் கயல் சீரியலும் கடந்த வாரம் டிஆர்பி ரேஸில் பின்னுக்கு தள்ளப்பட்டது. அந்த மூன்று சீரியல்களின் டிஆர்பியை எகிற வைப்பதற்காகவே இந்த சீரியல்களை மெகா சங்கமமாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் இனி வரும் வாரத்தில் இந்த சீரியல்கள் டிஆர்பியில் கடகடவென முன்னேறிச் செல்லவும் வாய்ப்பு உள்ளது.