சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சீரியலாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் தர்ஷனுக்கும், அன்புக்கரசிக்கும் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரனும், அறிவுக்கரசியும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். மறுபுறம் தர்ஷனை பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜனனி, ஜீவானந்தத்துடன் பிளான் போட்டு அதை செயல்படுத்த படாதபாடு பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் ஈஸ்வரியை பார்க்க சென்ற ஜனனியை மண்டபத்திற்கு வர சொல்லிவிட்டார் ஆதி குணசேகரன். அவர்கள் அனைவரும் நம் அருகிலேயே இருந்தால் எதுவும் செய்ய முடியாது என்கிற நோக்கத்தில் இவ்வாறு செய்திருக்கிறார்கள்.
24
ஈஸ்வரியை கொல்ல நடக்கும் சதி
ஜனனி மருத்துவமனையில் இருந்து வந்ததை பயன்படுத்தி, ஈஸ்வரியை போட்டுத்தள்ள கதிரும், அறிவுக்கரசியும் பிளான் போடுகிறார்கள். தர்ஷினி மட்டும் தான் ஆஸ்பத்திரியில் இருப்பதால், ஆட்களை இறக்கி தர்ஷினியை அடிச்சு தூக்கிவிட்டு, ஈஸ்வரியை கொலை செய்ய திட்டம் போட்டு வருகிறார்கள். மறுபுறம் ஜீவானந்தம் தங்களை தேடி தாங்கள் இருந்த வீட்டிற்கே வந்த போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, பார்கவி உடன் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆனதோடு, இனி அங்கு இருந்தால், பாதுகாப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அவரை புலிகேசி டீம் வலைவீசி தேடுகிறது.
34
லீக் ஆன ஜனனியின் பிளான்
மருத்துவமனையில் இருந்து வந்த ஜனனி, மண்டபத்தில் சக்தி மற்றும் நந்தினியை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று பேசுகிறார். ஜீவானந்தத்தை வைத்து பார்கவியை அழைத்து வந்து நாம் கல்யாணம் செய்வோம் என்பதையெல்லாம் இவங்க எதிர்பார்க்கல. ஆனால் நம்ம இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த ஏதோ செய்கிறோம் என்கிற பயம் மட்டும் அவர்களுக்கு இருப்பதாக கூறுகிறார் நந்தினி. நம்ம எல்லாரையும் இங்கே கூட்டிட்டு வந்து வச்சிக்கிட்டா எதுவும் நடக்காதுனு இவங்க நினைச்சுட்டு இருக்காங்க. அதைமீறி நாம் நடத்திக் காட்டனும், ஈஸ்வரி அக்கா விருப்பப்படி இந்த கல்யாணம் நடக்கும் என அவர்கள் மூவரும் பேசுவதை அறிவுக்கரசியின் எடுபுடி ஒட்டுக்கேட்டுவிடுகிறார்.
இந்த விஷயத்தை அவர் அறிவுக்கரசியிடம் சென்று சொன்னதும், அவர் ஆதி குணசேகரனிடம் சென்று, ஜனனியின் பிளானை போட்டுடைக்கிறார். பார்கவிக்கும் தர்ஷனுக்கும் கல்யாணம் நடக்க இருப்பதாகவும், ஜீவானந்தம் பார்கவியை கூட்டிட்டு வந்து தர்ஷனுடன் சேர்த்து வைக்க இருப்பதாக சொல்கிறார். இதையடுத்து ஜனனி மற்றும் சக்தியை அழைத்து பேசுகிறார் ஆதி குணசேகரன். அப்போது அவரிடம் சவால்விடும் ஜனனி, உங்களால் உண்மையை மீறி கெட்டதை ஜெயிக்க வைக்க முடியாது என சொல்கிறார். மறுபுறம் பணிக்கர் கல்யாணத்திற்கான பூஜைகளை தொடங்குகிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.