டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுத்த கதிர் – ஷாக்கான முத்துவேல், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Published : Oct 24, 2025, 06:59 PM IST

Muthuvel Sakthivel Shock Pandian Family Happy : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் காந்திமதியின் பிறந்தநாள் விழாவில் கதிர் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் கொடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சி அடையச் செய்தார்.

PREV
16
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

Muthuvel Sakthivel Shock Pandian Family Happy : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்னதான் பிடிக்காமல் அம்மா கோமதியின் கட்டாயத்திற்காக திருமணம் செய்திருந்தாலும் இப்போது கதிர் மற்றும் ராஜீ இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். அதுமட்டுமின்ரி இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு இருவரும் அந்நியோன்யமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது கதிர் தனது அப்பா பாண்டியனின் பெயரில் சொந்தமாக டிராவல்ஸ் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.

தொழிலாளிகளுக்கு 20 சதவிகித போனஸ் – ரூ.5 கோடிக்காக அல்லல்படும் சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் 2!

26
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் கோமதியின் அம்மா காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் தனது அம்மாவின் ஆசைக்காக கோமதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் தங்களால் சண்டை வராது என்று அம்மாவிற்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளனர்.

பல வருட கனவு நிறைவேறிடுச்சு... ஆனந்த கண்ணீர் விட்ட முத்துக்காளை - குவியும் வாழ்த்து!

36
பாண்டியன் குடும்பத்தினர்

முத்துவேல் குடும்பத்தினர் சிறியதாக ஒரு பேனர் வைத்த நிலையில் பாண்டியனின் குடும்பத்தினர் பெரியளவில் பேனர் வைத்தனர். அதுமட்டுமின்றி குலதெய்வ கோயிலில் நடைபெறும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாண்டியனின் குடும்பத்தினர் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று விழாவை ஒரு கலக்கு கலக்கினர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த முத்துவேல் மற்றும் சக்திவேல் அதிர்ச்சி அடைந்ததோடு விமர்சனமும் செய்தனர்.

46
முத்துவேல் அம்மாவிற்கு தங்க செயின் பரிசு கோமதி வளையல் பரிசு

இதையெல்லாம் தாண்டி முத்துவேல் அம்மாவிற்கு தங்க செயின் பரிசாக அளித்த நிலையில் உறவினர்களை வரவழைத்து அம்மாவுடன் புகைப்படம் எடுக்க செய்தனர். ஆனால், கடைசி வரை கோமதியை அழைக்கவே இல்லை. இதையெல்லாம் வேடிக்கை பார்த்த காந்திமதி கோமதியை மட்டுமின்றி தனது மருமகன் பாண்டியனையும் வர வழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

56
சக்திவேல் அண்ட் முத்துவேல்

ஆனால், தனது தரப்பு புகைப்பட கலைஞரை புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்த நிலையில் கதிர் டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் தான் அழைத்து வந்த போட்டோகிராஃபர் மற்றும் வீடியோ கிராஃபரை அழைத்து புகைப்படம் எடுக்க செய்தார். இதையெல்லாம் பார்த்த சக்திவேல் அண்ட் முத்துவேல் வாயடைத்து போனதோடு மட்டுமின்றி எல்லாவற்றையும் திட்டம் போட்டு செய்திருக்கிறார்கள் என்றனர்.

66
அம்மாச்சி மற்றும் தாத்தா

கதிர் ஒரு படி முன்னேறி தனது அம்மாச்சி மற்றும் தாத்தா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வரையக் கொடுத்து வாங்கி வந்து அதனை அம்மாச்சிக்கு பரிசாக கொடுத்து காந்திமதியை ஆனந்த கண்ணீரில் மூழ்க செய்தார். இதை குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் பார்த்து ரசித்தனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories