சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா கொண்டு சென்ற 5 லட்ச ரூபாய் பணத்தை இரண்டு மர்மநபர்கள் திருடிச் சென்ற நிலையில், அவர்கள் யார் என்கிற உண்மையை கண்டுபிடித்திருக்கிறார் முத்து.
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா, மருத்துவமனை பணத்தை பேங்கில் டெபாசிட் செய்ய ஆட்டோவில் சென்றபோது, அதை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள், அந்த பணத்தை திருடிச் சென்றனர். 5 லட்சம் ரூபாயை பறிகொடுத்த சீதாவை கண்டபடி திட்டிய மேனேஜர், அவரை வேலையை விட்டு நீக்குவதாகவும் கூறினார். இதையடுத்து வீட்டுக்கு வரும் மீனா, சீதா பணத்தை பறிகொடுத்ததை பற்றி கூறுகிறார். அப்போது அங்கிருந்த மனோஜ், அந்த பணத்தை சீதாவே திருடி இருக்கக்கூடும் என்று சொன்னதும் மீனாவுக்கு கோபம் வந்து அவரை திட்டுகிறார். அதேபோல் உன் ஷோரூமில் திருடு போன பணத்தையும் நீ தான் திருடிருப்ப என முத்து சொன்னதும் கப்சிப்னு ஆகிறார் மனோஜ்.
24
ஆட்டோ டிரைவர் மீது சந்தேகப்படும் முத்து
இந்த விஷயத்தை பற்றி பேசும் அண்ணாமலை, அந்த ஆட்டோ டிரைவரிடமும் விசாரிக்க சொல்கிறார். இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு செல்கிறார் முத்து. அப்போது இவர்களை பார்த்ததும் கதவை பூட்டுகிறார் அந்த ஆட்டோ டிரைவரின் மனைவி. ஏன் எங்களை பார்த்ததும் கதவை மூடுறீங்க, உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? நாங்க மணி அண்ணனுடைய பிரெண்டு தான் என நைசாக பேச்சு கொடுக்கிறார் முத்து. என்ன பிரச்சனைனு சொல்லுங்க என முத்து கேட்டதும், ஆட்டோ டிரைவர் மணியின் மனைவி தன் கணவர், அவரது தங்கச்சி கல்யாணத்துக்காக வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாதது பற்றி கூறுகிறார்.
34
உண்மையை சொன்ன ஆட்டோ டிரைவர்
6 மாதமாக வட்டி கட்டவில்லை என்பதால், கடன் கொடுத்தவர்கள், இன்றைக்குள் பணம் தரவில்லை என்றால் வீட்டில் உள்ள பொருளெல்லாம் எடுத்துருவோம்னு மிரட்டுனாங்க. அதுக்காக தான் நீங்க வந்துருக்கீங்கனு பயந்தேன் என சொல்கிறார். அப்போது கடன் கொடுத்தவர்கள் அங்கு வந்ததும் ஆட்டோ டிரைவரின் மனைவி பதறுகிறார். அந்த சமயத்தில் மணியும் 5 லட்ச ரூபாய் பணத்துடன் அங்கு வருகிறார். அப்போது அவரை கையும் களவுமாக பிடிக்கும் முத்து, இந்த பணம் எப்படி வந்துச்சு என கேட்கிறார். பேங்கில் இருந்து எடுத்ததா? இல்ல பேங்குக்கு போற வழியில எடுத்ததா? என மிரட்டி கேட்டதும், மணி இது ஹாஸ்பிடல் பணம் தான் என்பதை ஒப்புக்கொள்கிறார்.
நீயே ஆளுங்கள செட் பண்ணி பணத்தை திருடிட்டு எதுவும் தெரியாத மாதிரி நடிச்சிருக்க. நீ உன் கஷ்டத்துக்கு திருடி ஒரு பொண்ணோட வேலையை போக வச்சிருக்க. உன்னால அந்த பொண்ணு அங்க அழுதுகிட்டு இருக்கா என முத்து திட்டுகிறார். இதையடுத்து முத்துவின் காலில் விழும் ஆட்டோ டிரைவர் மணி, தயவு செஞ்சு போலீசில் சொல்லிடாதீங்க என கெஞ்சிக் கேட்கிறார். இதையடுத்து தானே அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்தியில் கொடுப்பதாக சொல்லும் முத்து, அந்த ஆட்டோ டிரைவர் சிக்காமல் இருக்க பிளான் போடுகிறார். பின்னர் என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.