எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பழைய பகையை தீர்க்க சென்றிருக்கும் ஆதி குணசேகரன், கதிருக்கு போன் போட்டு ஒரு முக்கிய விஷயத்தை சொல்லி இருக்கிறார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி மற்றும் ரேணுகாவிற்கு தீபாவளி சீர் கொடுக்க வந்திருந்த அவர்களின் அம்மாக்களை கதிர் அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புகிறார். இதையடுத்து அவர்களை வெளியே அழைத்து வரும் ரேணுகா, இது வீடே இல்லை, நாங்களே வேண்டா வெறுப்பாக இங்கு இருக்கிறோம் என சொல்கிறார். அதேபோல் நந்தினியும், இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாங்கள் இந்த வலியை அனுபவிக்க போறோமோ என ஆதங்கத்துடன் பேசுகிறார். பின்னர் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறி தங்கள் அம்மாவை இருவரும் வழியனுப்பி வைக்கிறார்கள்.
24
ஆதி குணசேகரன் இஸ் பேக்
வீட்டுக்குள் விசாலாட்சி, அண்ணன் எப்போ வருவான் என குணசேகரனை பற்றி கதிர் மற்றும் ஞானத்திடம் கேட்கிறார். அதற்கு கதிர், எத்தனை முறை சொல்வது, அண்ணன் வருவாங்க, நீங்க அமைதியா இருங்க என கத்துகிறார். பின்னர் கதிருக்கு ஆதி குணசேகரனிடம் இருந்து போன் வருகிறது. அப்போது தன்னுடைய அடுத்த பிளான் குறித்து பேசும் குணசேகரன், சக்தியும் அவன் பொண்டாட்டி ஜனனியும், நான் வரும் வரை அந்த வீட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என சொல்கிறார். ஏன் என்னாச்சு என கதிர் கேட்க, இன்னும் நான்கு நாட்களில் அம்புட்டையும் முடித்துக் காட்டுகிறேன் என கூறுகிறார்.
34
ஜனனி - சக்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
இத்தனை நாட்கள் தான் இருக்கும் இடத்தை சீக்ரெட்டாக வைத்திருந்த ஆதி குணசேகரன், தற்போது இராமேஸ்வரத்தில் இருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. அவர் அந்த லெட்டரில் உள்ள நபரைத் தேடி தான் சென்றிருக்க கூடும். அந்த பெண்ணின் கதையை முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார் குணசேகரன். மறுபுறம் ஜனனி மற்றும் சக்தி இருவரும் இராமேஸ்வரம் சென்று அந்த லெட்டரில் உள்ள பெண் யார்? அவர் எதற்காக ஆதி குணசேகரனுக்கு சாபம் விட்டு லெட்டர் அனுப்பி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள தயாராகி வருகிறார்கள்.
சக்தி - ஜனனி இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என ஆதி குணசேகரன் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருப்பதால், அவர்களை ஹவுஸ் அரெஸ்ட் செய்ய பிளான் போடுகிறார் கதிர். இவரை மீறி அவர்கள் இருவரும் இராமேஸ்வரத்துக்கு செல்வார்களா? ஆதி குணசேகரன் பற்றிய ரகசியம் வெளியே வருமா? நான்கு நாட்களுக்குள் ஆதி குணசேகரன் செய்யப் போகும் சம்பவம் என்ன? ஈஸ்வரியை குணசேகரன் தாக்கிய வீடியோ ஆதாரத்தை கைப்பற்றிய புது வில்லன் எப்போது எண்ட்ரி கொடுக்கப் போகிறார்? என்கிற பல கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.