சிறகடிக்க ஆசை சீரியலில் 5 லட்சம் பணத்துடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த சீதாவிடம் இருந்து ஒரு கும்பல் அந்த பணத்தை திருடிச் செல்கிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் அம்மா சந்திரா ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவரை யார் கவனித்துக் கொள்வது என்பதில் மீனாவுக்கும், சீதாவுக்கும் இடையே போட்டி வந்தது. அதில் மீனா, தானே அம்மாவுடன் இருந்து கவனித்துக் கொள்வதாக சொல்ல, மறுபுறம் சீதாவும் தான் அம்மாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். இதில் சந்திரா, சீதா வீட்டுக்கே செல்லட்டும் என முத்து சொல்கிறார். அங்கு சென்றாலாவது உன்மீது உள்ள கோபம் சீதாவுக்கு குறையும் என்பதால் தான் அப்படி சொன்னேன் என மீனாவிடம் சொல்கிறார் முத்து.
24
பேங்குக்கு செல்லும் சீதா
இதையடுத்து ஆஸ்பத்திரி மேனேஜர், அங்கு வேலை பார்க்கும் சீதாவிடம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்து பேங்கில் டெபாசிட் செய்துவிட்டு வரச் சொல்வதோடு, துணையாக ஒரு செக்யூரிட்டியையும் அனுப்புகிறார். அந்த பணத்துடன் சீதா ஆட்டோ ஏற செல்லும் போது அந்த செக்யூரிட்டிக்கு போன் வருகிறது. அவருடைய மகனை நாய் கடித்துவிட்டதாக கூறி போன் வந்ததால், அந்த செக்யூரிட்டி பதறிப்போகிறார். அவர் வேலையை முடித்துவிட்டு மகனை பார்க்க செல்கிறேன் என்று சொன்னாலும், அதற்கு செவி சாய்க்காத சீதா, நீங்க போய் உங்க பையனை பாத்துக்கோங்க, நான் பத்திரமா பணத்தை டெபாசிட் செய்துவிடுகிறேன் என கூறி ஆட்டோவில் செல்கிறார்.
34
திருடுபோகும் பணம்
செல்லும் வழியில் ஆட்டோவை மடக்கிய இரண்டு ரெளடிகள், டிரைவரை அடித்து போட்டு, சீதாவிடம் இருந்து பணத்தை திருடிச் செல்கிறார்கள். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சீதா நடுரோட்டில் நின்று அழுதுகொண்டிருக்க, அந்த வழியாக வரும் மீனா, சீதாவிடம் என்ன ஆச்சு என கேட்க, முதலில் தனது ஈகோவால் பேசாமல் இருக்கும் சீதா, பின்னர் வேறுவழியின்றி நடந்ததை மீனாவிடம் கூறுகிறார். இதையடுத்து சீதாவை, ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறார் மீனா. அங்கு சென்றதும் மேனேஜரிடம் நடந்தவற்றை கூறுகிறார் சீதா. ஆனால் அந்த மேனேஜர் எதையும் நம்பும் மனநிலையில் இல்லை.
5 லட்சத்தை இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்குற என சொல்லி திட்டுவதோடு, உன்னை வேலையை விட்டு நீக்குவதாகவும் சொல்கிறார். அதுமட்டுமின்றி, நீயே ஆள் வச்சு அந்த பணத்தை திருடிட்டியா என கேட்டதால் கண்ணீர் விட்டு அழுகிறார் சீதா. பின்னர் மீனா அந்த மேனேஜரை திட்டுகிறார். அப்போது நீயும் கூட்டுக் களவாணியா என கேட்கிறார் அந்த மேனேஜர். இவ்வளவு நாள் பணத்தை எடுத்து சென்றிருக்கிறோம். இன்று இவளிடம் கொடுத்து அனுப்பியபோது தான் இப்படி ஆகி இருக்கிறது. என்ன செய்வியோ தெரியாது எனக்கு அந்த 5 லட்சம் பணம் வரணும் என அந்த மேனேஜர் கறாராக சொல்லிவிடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.