தலைமறைவான ஆதி குணசேகரன்; தர்ஷனின் தல தீபாவளி கொண்டாட்டத்தில் எதிர்பாரா ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது

Published : Oct 22, 2025, 11:34 AM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆன நிலையில், தர்ஷனும், பார்கவியும் தலை தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்கள்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி உடனான இறுதி யுத்தத்தில் தோல்வியடைந்த ஆதி குணசேகரன், தான் மூடி மறைத்து வைத்திருந்த ரகசியங்கள் எல்லாம் காணாமல் போனதை அடுத்து, ஜனனி, சக்தி ஆகியோர் அந்த விஷயத்தை எப்படியாவது கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிற பயத்தில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி, தலைமறைவாக இருக்கிறார். அவர் இராமேஸ்வரத்தில் உள்ள தனக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க சென்றிருக்கக் கூடும். ஆதி குணசேகரன் வீட்டில் இல்லாத நேரத்தில் தர்ஷன் - பார்கவிக்கு தலை தீபாவளி கொண்டாடி உள்ளனர்.

24
காயமடைந்த கரிகாலன்

தலை தீபாவளிக்காக நந்தினி, ரேணுகா, ஜனனி, சக்தி ஆகியோர் சேர்ந்து தர்ஷனுடன் வெடி போட்டு மகிழ்ந்த நிலையில், அவர்களுக்கு போட்டியாக கதிர், கரிகாலன், ஞானம் ஆகியோர் வீட்டு வாசலில் புஸ்வானம் வைக்கும் போது அது கரிகாலன் மீது பட்டு அவர் காயமடைகிறார். கரிகாலன் வலியால் துடிப்பதை பார்த்து ஜனனி கேங் கைதட்டி சிரித்தார்கள். பின்னர் தர்ஷன் - பார்கவியை மாடிக்கு அழைத்து சென்று அவர்களுடன் தீபாவளி பலகாரங்களை சாப்பிடுகிறார்கள். கீழே கதிர் தன்னுடைய கேங் உடன் அமர்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்க, அப்போது இரண்டு பெண்கள் எண்ட்ரி ஆகிறார்கள்.

34
தீபாவளியன்று திடீர் எண்ட்ரி

அவர்கள் வேறுயாருமில்லை நந்தினி மற்றும் ரேணுகாவின் அம்மாக்கள் தான். அவர்களின் குரலைக் கேட்டதும் மாடியில் இருந்து நந்தினி மற்றும் ரேணுகா, கீழே இறங்கி வரும் கேப்பில் தன் மாமியாரிடம் எதுக்கு இங்க வந்தீங்க என கேட்கிறார் கதிர். அதற்கு அவர் என்ன மாப்பிள்ளை இப்படி சொல்றீங்க என கேட்க, பொண்ணை பெத்து கட்டிவச்சிருந்தா மாப்பிள்ளைனு கூப்பிடலாம், ஒரு பேயை ஏவிவிட்டுட்டு, நீங்க சந்தோஷமா இருக்கீங்களா என கேட்கிறார் கதிர். இனி மாப்பிள்ளைனு கூப்பிட்டீங்கனா நல்லா இருக்காது. எதுக்கு வந்தீங்களோ அதைமட்டும் சொல்லுங்க என சீருகிறார் கதிர்.

44
கோபத்தில் ரேணுகா

இதையடுத்து பேசும் ரேணுகா, நான் தான் சீர் எதுவும் வேண்டாம்னு சொன்னேன்ல, அதுக்காகவே வம்படியா இங்க வந்துருக்கீயா என தன் அம்மாவை திட்டுகிறார். தீபாவளி கொண்டாடுற சூழல் உங்க வீட்ல இல்லைனு எனக்கு தெரியும், ஆனா நீங்க கடைக்கு போய் புது டிரெஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தது தெரிஞ்சதும் தான் நானும் சீரை கொடுக்க வந்தேன் என சொல்கிறார் ரேணுகாவின் அம்மா. பின்னர் குறுக்கிட்டு பேசும் நந்தினி, தர்ஷன் - பார்கவிக்காக தான் இந்த ஏற்பாடுகளை தாங்கள் செய்வதாகவும் மற்றபடி இங்க யாரும் கொண்டாடவில்லை என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories