எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜெயிலில் இருக்கும் அறிவுக்கரசி, கதிருக்கு போன் போட்டு பேசியுள்ளார். இதையடுத்து இன்றைய சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ள ஆதி குணசேகரன், நீண்ட நாட்களுக்கு பின்னர் கதிருக்கு போன் போட்டு, தான் சில தினங்களில் வந்துவிடுவேன் என்றும், அதுவரை ஜனனி மற்றும் சக்தி இருவரையும் வீட்டை விட்டு வெளியேற விடக்கூடாது எனவும் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி தன் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்களிடம் இருந்து எப்படியாவது வாங்குமாறும் கூறி இருந்தார். இதனால் தன்னுடைய அம்மாவை வைத்து சக்தியிடம் பேசி குணசேகரன் தொடர்பான ஆதாரங்களை வாங்கிவிட பிளான் போடுகிறார் கதிர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
கதிரிடம் போனில் பேசும் அறிவுக்கரசி
அம்மாவிடம் பேச வருகிறார் சக்தி. அப்போது என்னனு சொல்லு அவன்கிட்ட இருந்து நான் வாங்கித் தருகிறேன் என விசாலாட்சி சொல்ல, அவன் என்ன எடுத்தானோ அதை கொடுக்க சொல்லு என கேட்கிறார் கதிர். ஆனால் அதற்கெல்லாம் சக்தி செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக முல்லையும், அன்புக்கரசியும் மீண்டும் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார்கள். அப்போது ஜெயிலில் இருக்கும் அறிவுக்கரசி, போன் போட்டு கதிரிடம் பேசுகிறார். அவளுக்கு என்மேல இருக்குற பாசத்துனாலயும், என்னை வெளிய எடுத்துடனும்குற தவிப்புல தான் அந்த புள்ள அங்க வந்து நிற்பதாக சொல்கிறார் அறிவு.
34
வீட்டை விட்டு கிளம்ப சொல்லும் அறிவுக்கரசி
நான் அன்புக்கரசியிடம் அங்கு போக வேண்டாம்னு எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ஆனா என் பேச்சை கேட்காம உன் வீட்டு வாசல்ல வந்து நின்னு எனக்கு போன் அடிச்சாங்க. அப்பவும் வேண்டாம்னு தான் சொன்னேன். அவ கேக்கல என சொல்கிறார் அறிவு. இதையடுத்து முல்லையிடம் பேசும் அறிவுக்கரசி, எதுக்காக அங்க கூட்டிட்டு போன, என் புள்ள அங்க போய் பிச்சை கேட்க வேண்டிய அவசியமில்ல, நீ உடனே அவளை கூட்டிட்டு அங்கிருந்து கிளம்பு என சொல்வதோடு, உன்னால முடிஞ்சா நீ வக்கீல கூட்டிட்டு வா... இல்லேனா நான் இங்கயே கிடந்து சாகுறேன் என அழுதபடி கூறிவிட்டு போனை கட் பண்ணுகிறார் அறிவு.
பின்னர் வீட்டுக்குள் செல்லும் முல்லை, அங்கு வாசலில் நிற்கும் அன்புக்கரசியிடம் வா போகலாம், உன் அக்கா இங்க இருக்க வேண்டாம்னு சொல்லிட்டா என சொல்கிறார். பின்னர் அன்புக்கரசியும் அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கும் போது, அவரை தடுத்து நிறுத்தும் விசாலாட்சி, அவ இங்கயே இருக்கட்டும் என சொல்லிவிடுகிறார். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். ஏனெனில் தர்ஷன் - பார்கவியை கல்யாணம் செய்தபோது, உங்க ரெண்டு பேரையும் நிம்மதியா வாழ விடமாட்டேன் என சாபம் விட்டிருந்தார் அன்புக்கரசி. அவர் சொன்னபடியே தற்போது வீட்டுக்குள் வந்துள்ளதால், தர்ஷனை பழிவாங்க வாய்ப்பு உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகளில் எதிர்பாரா திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.