
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் இன்றைய 419ஆவது எபிசோடில், சுவாரஸ்யமான பல விஷயங்கள் நடந்திருக்கிறது. அதில், ஒன்றுதான் தங்கமயிலுக்கு கஷ்டமர் கொடுத்த டிப்ஸ் மற்றும் பழனிவேல் படத்துக்கு செல்ல ரூ.200 கொடுத்து அனுப்பியிருக்கிறார் பாண்டியன்.
இன்றைய எபிசோடு தங்கமயிலின் அம்மா மற்றும் அப்பா காட்சிகளுடன் தொடங்குகிறது. இருவரும் தங்களது மகளை இந்த வீட்டில் கொடுத்திருக்க கூடாது என்று பேசி வருகின்றனர். தனது மகளை வேலைக்கு அனுப்புகிறார்களே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அடுத்து மீனா மற்றும் செந்தில் இருவரும் 10 லட்சம் கொடுத்து வேலைக்கு போகணுமா என்பது பற்றி டிஸ்கஸ் பண்ணிக்கிறார்கள். யாருமே அவ்வளவு பணத்தை தரமாட்டாங்க. அரசு வேலைக்கு என்னென்ன தேர்வு வருகிறது என்று பார்ப்போம். அதை நீங்கள் எழுதினால் எதிலாவது ஒன்றில் பாஸ் ஆகிடலாம். காசு கொடுத்து வேலை வாங்க வேண்டாம் என்று மீனா அறிவுரை வழங்குகிறார்.
சாதாரண அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுக்க சொல்லும் மீனாவின் அப்பா – அதிர்ச்சியடையும் செந்தில், மீனா!
அடுத்த காட்சியாக ஹோட்டலில் வேலை பார்க்கும் தங்கமயில், 2 கையிலயும் சாப்பாடு தட்டை தூக்கிக் கொண்டு சுறுசுறுப்பாகவும், பதற்றமாகவும் ஓடி ஓடி வேலை பார்க்கிறார். இல்லை இல்லை இவரை மேனேஜர் வேலை வாங்குகிறார். வேலைக்கு புதுசு அது தான் கொஞ்சம் பதற்றம் என்று தங்கமயில் கஸ்டமரிடம் சொல்கிறார்.
என்னென்ன ஜூஸ் இருக்கிறது என்று கஸ்டமருக்கு கேட்டு சொல்கிறார். கஸ்டமர் சாப்பிட்ட பிறகு டிப்ஸ் கொடுக்கிறார்கள். அதற்கு சார்பில் 150 தான் நீங்கள் 160 வச்சிருக்கிங்க என்று தங்கமயில் சொல்ல, அது உங்களுக்கு டிப்ஸ் என்று கஸ்டமர் சொல்லிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார். அத கையில் வச்சுக் கொண்டு கண் கலங்குகிறார் தங்கமயில்.
என் பொண்டாட்டி இவங்க தான்; நடிகையுடனான கிசுகிசுக்கு பின் விஜய் டிவி சீரியல் நடிகர் போட்ட பதிவு வைரல்
இதைத் தொடர்ந்து சுகன்யா படத்திற்கு செல்ல மும்முரமாக ரெடியாகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பழனிவேல் இன்னும் படத்திற்கு செல்ல அனுமதி கேட்கவில்லை. செந்திலின் உதவியுடன் பழனிவேல் படத்திற்கு செல்ல அனுமதியும் கிடைக்கிறது. ஆனால் படத்திற்கு ரூ.200 கொடுக்கிறார் பாண்டியன். அதற்கு செந்தில் படத்திற்கு சென்றால் ரூ.500 செலவாகும் என்று சொல்லவே, பாண்டியன் அதற்கும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். மொத்தத்தில் இது பழனிக்கு வெச்ச ஆப்பாக மாறியுள்ளது.
வீட்டிற்கு வந்த பழனிவேல் அவசர அவசரமாக புறப்படுகிறார். அவருக்கு கதிர் மேக்கப் போடுகிறார். வீட்டில் ராஜீ, மீனா, கோமதி, கதிர் என்று எல்லோரும் இருக்கும் போது சரவணனும் வந்துவிடுகிறார். அவருடைய பைக் சாவியை கொடுத்து வழியனுப்புகிறார். படம் என்னவென்று இன்னும் முடிவு செய்யவில்லை. ரொமாண்டிக் படமாக பாருங்கள். கார்னர் சீட்டுக்கு போங்க என்று ஆளாளுக்கு அட்வைஸ் பன்றாங்க. ஆல் தி பெஸ்டும் சொல்றாங்க, கோமதி மட்டும் பணம் இருக்கா என்று கேட்கிறார். இருக்கு என்று சொல்கிறார்.
இறுதியாக சரவணனும், கதிரும் பழனிவேல் பற்றி பேசிக் கொள்கிறார்கள். வழக்கமாக மாமா படம் பார்த்துட்டு வந்தால் கதை சொல்வார். ஆனால், இந்த முறை கதை சொல்லமாட்டார். அவர், ரொமான்ஸ் மூடில் இருப்பார் என்று பேசி சிரித்துக் கொள்கிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி பழனிவேல் எந்த படத்திற்கு சென்றார், அவரிடம் படத்திற்கான போதுமான அளவில் பணம் இருந்ததா? டிக்கெட் விலை எவ்வளவு, சுகன்யா மற்றும் பழனிவேல் இருவரும் சண்டையில்லாமல் படம் பார்த்தார்களா என்பது பற்றி நாளைய எபிசோடில் தெரியவரும்.