ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அண்ணா. ரத்னா கழுத்தில் கத்தியை வைத்து கடத்தி செல்லும் வெங்கடேஷ் அவளை ஒரு குடோனில் அடைத்து வைத்தது மட்டும் இன்றி, ரத்னாவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கிறான். சரியான நேரத்தில், அந்த இடத்திற்கு வந்து சண்முகம் அதிர்ச்சி கொடுப்பதோடு, தங்கையை காப்பாற்றுகிறான்.
26
வெங்கடேஷை கண்டுபிடித்த சண்முகம்:
இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில், வெங்கடேஷ்... சண்முகத்தை பார்த்து அதிர்ச்சியாகும் நிலையில், நான் இருக்கும் இடம் உங்களுக்கு எப்படி தெரிந்தது என கேட்கிறான். இதற்க்கு சண்முகம், அடேய் முட்டாப்பயலே உன் போன் ஆன்ல தானே இருக்கு. அதை வெச்சு தான் நீ இருக்கும் இடத்தை கண்டு புடுச்சி இங்கே வந்தேன் என சொல்கிறான்.
தன்னுடைய தங்கை கதறி அழுவதை பார்த்து, உச்சகட்ட கோபத்திற்கு செல்லும் சண்முகம்... ஒரு பெரிய பொருளை தூக்கி வெங்கடேஷ் தலையில் போட முயற்சி செய்யும் நிலையில், அதை தடுத்து நிறுத்தும் ரத்னா, இவன் இங்க சாக கூடாது. என் மேல தப்பு இல்லனு ஊர் மக்கள் முன்னாடி சொல்லிட்டு சாகனும் என ஆக்ரோஷமாக பேசுகிறாள்.
46
கொடி மரத்தில் கட்டி வைக்கப்பட்ட வடமாநில இளைஞர்
மற்றொரு புறம், டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த வடமாநில இளைஞரை ஊர் மக்கள் ஸ்கூல் கொடி கம்பத்தில் கட்டி வைத்திருக்க சௌந்தரபாண்டி இவனை எதுக்கு கட்டி வச்சிருக்காங்க? என்று கேட்க சனியன், ஐயா பாதி உண்மையை கண்டுபிடிச்சாச்சு. ஒருவேளை வெங்கடேஷ் மாட்டிக்கிட்டா உங்க கதை அவ்வளவு தான் என்று சொல்கிறான்.
சௌந்தரபாண்டி, எப்படியும் வெங்கடேஷை கண்டுபிடிக்க முடியாது என தைரியமாக இருக்க, சண்முகம் வெங்கடேஷுடன் என்ட்ரி கொடுப்பதால் அதிர்ச்சியில் உறைகிறான். இதையடுத்து ஊர் மக்கள் ரத்னாவிடம் மன்னிப்பு கேட்க ஷண்முகம் மீண்டும் ஸ்கூலை திறந்து ரத்னாவை மீண்டும் பிரின்சிபல் சேரில் உட்கார வைக்கிறான். வெங்கடேஷ் மீது முத்து பாண்டி போடப்பட்டு அவனுக்கு கோர்ட் மூலம் தண்டனை கிடைக்கும் என உறுதி கொடுக்கிறான்.
66
anna serial
அடுத்து ரத்னா களங்கம் இல்லாதவள் என்பதை நிரூபித்து வீட்டிற்கு வர, அவளை தங்கைகள் கண்ணீருடன் வரவேற்கிறார்கள். வெங்கடேஷ் சிக்கியதற்கு பரணி தான் காரணம் என்று பெருமையா சொல்ல, ரத்னா நான் இப்படி அவமானப்படவும் அந்த பரணி தான் காரணம் என கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது பற்றி அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.