மீட்கப்பட்ட வீடு... அண்ணனை டம்மி பீஸ் ஆக்கி நடேசன் செய்த அட்ராசிட்டி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

Published : Feb 19, 2026, 08:44 AM IST

அய்யனார் துணை சீரியலில் உயிலை வெற்றிகரமாக மீட்ட சோழன் மற்றும் நிலா, பின்னர் ஃபேமிலியோடு மீண்டும் வீட்டுக்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் நடேசனின் அண்ணன், போலீசில் கொடுத்த புகாரினால், நடேசனின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, அவரின் குடும்பத்தார் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து ஓட்டலில் தங்கியிருந்த அனைவரும், வீட்டை மீட்பதற்கு தேவையான உயிலை மீட்க பிளான் போட்டு, அதனை சோழனும், நிலாவும் சேர்ந்து வெற்றிகரமாக மீட்டனர். உயிலை மீட்ட கையோடு ஓட்டலுக்கு சென்ற அவர்கள் அங்கு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களிடம் இந்த குட் நியூஸை காலையில் சொல்லலாம் என காத்திருந்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
குட் நியூஸ் சொன்ன சோழன் - நிலா

பின்னர் விடிந்த உடன் சோழனும், நிலாவும் அனைவரும் தங்கியிருந்த ரூமுக்கு வருகிறார்கள். ஏற்கனவே நிலா போன் பண்ணி எல்லாரையும் ரூமிலேயே இருக்கும்படி கூறி இருக்கிறார். இதனால் நடேசனையும் வெளியே விடாமல் பிடித்து வைத்திருக்கிறார்கள். அதன்பின்னர் உள்ளே சென்றதும், ஒரு சந்தோஷமான விஷயம், நீங்களே கண்டுபிடிங்க என சோழன் சொல்ல, யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, நிலா கையில் இருந்த பத்திரத்தை வாங்கி, எது நம்மகிட்ட இருந்த வீடு நமக்கு சொந்தமாகுமோ அதுவே நமக்கு கிடைச்சிருச்சு என சோழன் சொல்ல, அனைவரும் சந்தோஷமடைகிறார்கள்.

35
மீண்டும் வீட்டுக்கு செல்லும் நடேசன் ஃபேமிலி

அதன்பின்னர் ஓட்டலை காலி செய்துவிட்டு அனைவரும் வீட்டுக்கு செல்கிறார்கள். யாரெல்லாம் வீட்டுக்கு சீல் வைத்தார்களோ அவர்கள் எல்லோரையும் மீண்டும் வர வைத்து, அந்த உயிலை கொடுக்கிறார்கள். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் உயிலை வாங்கி படித்து, நடேசன் பெயரில் தான் இந்த உயில் இருக்கு, அதனால் இந்த வீடு அவருக்கு தான் சொந்தம் என சொல்கிறார்கள். இதையடுத்து பேசும் நடேசன், நாங்க தான் ஏற்கனவே சொன்னேன்ல இதுங்க பேச்சைக் கேட்டு சீல் வச்சிட்டீங்க என கூறுகிறார். நீங்க அப்பவே உயிலை காட்டி இருந்தால் நாங்க ஏன் சீல் வைக்கப்போறோம் என கூறுகிறார் இன்ஸ்பெக்டர்.

45
உயிலை கொடுத்து வீட்டை மீட்ட நிலா

இதன்பின்னர் அங்கிருந்த நடேசனின் அண்ணனும், தங்கச்சியும் இது போலியான பத்திரம் என பேசுகிறார்கள். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அதனை பரிசோதித்து இது ஒரிஜினல் பத்திரம் தான் என சொல்லிவிடுகிறார்கள். இருந்து விடாத நடேசனின் உடன்பிறப்புகள், எங்க அப்பா இன்னொரு உயில் எழுதி வச்சிருக்காரு, அதில் எங்க பெயரில் தான் இந்த வீடு இருப்பதாக எழுதி வைத்திருக்கிறார் என சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். உடனே இன்ஸ்பெக்டர், அப்போ அந்த உயிலை எடுத்துட்டு வாங்க, என கேட்டதும், இருவரும் திருதிருவென முழிச்சிக்கிட்டு நிற்கிறார்கள்.

55
நக்கலடித்த நடேசன்

இதையடுத்து பேசும் நடேசன், இதுங்க ரெண்டு பயங்கரமான ஃபிராடுங்க, பொய் சொல்றாங்க. இவ்ளோ முட்டாளா இருக்கீங்களே, இன்னொரு உயில் எப்படி எழுதி வைக்க முடியும், அப்படியே இருந்தா உங்களுக்கு தெரியாதானு கேட்டு கிண்டல் பண்ணி சிரிக்கிறார். அதன் பின்னர் வீட்டில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்படுகிறது. பின்னர் நடேசன் குடும்பத்தார் வீட்டு வேலைகளை தொடங்குகிறார்கள். இதையெல்லாம், சேரனின் பெரியப்பா காருக்கு பின்னால் ஒளிந்திருந்து பார்க்கிறார். இதை நோட் பண்ணும் நடேசன், தன் அண்ணனை பிடித்து வைத்து தன் மகன்களை பாட்டு பாட சொல்லி, அவருக்கு செம பதிலடி கொடுக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories