பிள்ளையால் வந்த தொல்லை... வசமாக சிக்கப்போகும் ரோகிணி..! சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம் இருக்கு

Published : Aug 11, 2025, 03:41 PM IST

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் மகன் தான் கிரிஷ் என்பது தெரியவந்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Siragadikka aasai serial Today Episode

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் முழுக்க விஜயா டாக்டர் பட்டம் வாங்குவதற்காக நல்லவர் போல போட்ட நாடகமெல்லாம் கலாட்டாவும், கலகலப்புமாக சென்றது. இறுதியாக அவர் அன்னதானம் போடும் போது அவர் கையால் சாப்பாடு வாங்கி சாப்பிட்ட முத்து, முதன்முறையாக தன் அம்மா கையால் சாப்பிட்டேன் என்று சந்தோஷப்பட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார். இது ஒரு புறம் இருக்க கிரிஷின் பாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீரென காணாமல் போய் விடுகிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிஷின் பாட்டி லட்சுமியை அழைத்து செல்ல முத்துவும், மீனாவும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு சென்று விசாரிக்கும் போது, லட்சுமி ஏற்கனவே டிஸ்சார்ஜ் ஆகி போய்விட்டதாக கூறுகிறார்கள். இதைக்கேட்டு ஷாக் ஆன முத்து, யார் அழைத்து சென்றார்கள் என கேட்க, அதற்கு மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்ஸ், அவங்களோட பொண்ணு தான் வந்து கூட்டிட்டு போனாங்க என சொல்கிறார். அவங்க பொண்ணு தான் வெளிநாட்டில் இருக்கிறாரே அவர் எப்படி அழைத்து சென்றிருப்பார் என்று முத்துவும், மீனாவும் குழம்பிப் போகிறார்கள்.

34
ரோகிணியின் முகத்திரையை கிழிக்கும் முத்து

அதுமட்டுமின்றி அவங்க பொண்ணு அடிக்கடி வந்து பார்த்துச் சென்றதாகவும் நர்ஸ் கூறுகிறார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த முத்து, அவரின் பெயர் என்ன என கேட்கும்போது, ரோகிணி என சொல்கிறார்கள். இதனால், முத்து - மீனாவுக்கு டவுட் வருகிறது. உடனே அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருக்கும் காட்சியை காட்டுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கிறார்கள். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும் காட்ட ஓகே சொல்கிறது. அப்போது செக் செய்து பார்க்கும்போது ரோகிணி தான் மருத்துவமனையில் இருந்து லட்சுமியை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்றது தெரியவருகிறது.

44
வசமாக சிக்கும் ரோகிணி

இதைப்பார்த்து ஷாக் ஆன முத்து - மீனா, அப்போ இந்த அம்மாவோட பொண்ணு ரோகிணி தானா... கிரிஷோட அம்மாவும் ரோகிணி தானா என தெரிந்ததும் இவ்ளோ நாள் இதை மறைத்து தான் நாடகமாடினாரா இந்த பார்லர் அம்மா என கண்டுபிடித்துவிடுகிறார் முத்து. ரோகிணி தான் யாருக்கு தெரியாமல் எஸ்கேப் ஆகிவிட்டதாக இருக்க, அனைத்து உண்மையையும் தெரிந்த முத்து - மீனா, வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு என்ன ஆனது? ரோகிணி பற்றிய உண்மையை உடைத்தார்களா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories