
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா தனக்கு கொடுத்த அரசு விடுதிக்கு விருப்பமே இல்லாமல் கணவரின் கட்டாயத்தின் பேரில் அங்கு சென்றுவிட்டார். இரு வீட்டார் குடும்பத்தினரும் கலந்து கொள்ள வீட்டில் பால் காய்ச்சும் விழாவும் நடைபெற்றது. என்னதான், பால் காய்ச்சு விழாவிற்கு சாப்பாடு வாங்க ரூ.2500 இல்லாமல் கஷ்டப்பட்ட போதிலும் கூட அடுத்த நாள் அவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்களுக்கு அப்போதே பணம் எங்கு, எப்படி வந்தது என்பது பற்றி நன்கு புரிந்திருக்கும். அது, மீனா வைத்திருந்த ரூ.10 லட்சம் பணம். அதை வைத்து தான் வீட்டிற்கு தேவையான ஃபர்னிச்சர், டிவி உள்ளிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டிருந்தார்.
ஒரு ஈ, காக்கா கூட வரக்கூடாது, அப்புறம் நான் மனுசனாவே இருக்கமாட்டேன் – இளையவர் சக்திவேல் ஆவேஷம்!
இப்போது பால் காய்ச்சி வீட்டிற்கு வந்ததும் அதையெல்லாம் ரொக்கமாக கொடுத்து வாங்கவும் செய்துள்ளார். முதலில் ரூ.42000க்கு டைனிங் டேபிள் வந்த நிலையில் அடுத்து டிவி, ஷோஃபா என்று எல்லாமே வந்துவிட்டது. இது தவிர இன்னும் என்னெல்லாம் ஆர்டர் செய்திருக்கிறார் என்பதை அந்த பொருட்கள் வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரியவரும். அதில் கட்டில் மெத்தை இருக்கும் என்று தெரிகிறது.
காசு பணம் கையிலிருந்தால் தப்பு செய்ய தோன்றும். அப்படித்தான் செந்தில் கையில் காசு வைத்திருக்கும் நிலையில் சரக்கு அடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த முதல் நாளில் வீட்டில் சமையல் செய்ய எந்த சாமான்களும், பொருட்களும் இல்லை. அதனால், உடனடியாக புறப்பட்டு மாமனார், மாமியார் வீட்டிற்கு சென்று அங்கு சாப்பிட்டு விட்டு மதிய சாப்படும் கட்டிக் கொண்டு ஆபிஸிற்கு சென்றார்.
பிக்பாஸ் வீட்டில் அலைமோதும் காதல் லீலைகள் - பாருவுக்கும் ஆளு கிடைச்சாச்சு!
செந்தில் சமையல் செய்ய காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்த போது மீனாவிற்கு போன் போடவே, அவர் தான் சாப்பிட்டுவிட்டு மதிய சாப்பாடும் வாங்கிக் கொண்டு ஆபிஸிற்கு கிளம்பிவிட்டேன் என்றார். இப்போது ராஜியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆபிஸ் முடிந்து செந்திலுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இதில், மழை பெய்து ரோடு எல்லாம் சேதம். அதான் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது என்று செந்தில் மீனாவிடம் சொல்ல, அவரும் அமைதியாக ஆட்டோவில் ஏற வீட்டிற்கு சென்றனர். மீனா வீட்டிற்கு வந்ததும், வீட்டில் டிவி, ஷோஃபா எல்லாமே இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா இதெல்லாம் ரூ.10 லட்சத்தில் வாங்கினது தானே என்று கேட்க, ஆமாம் என்றார். மேலும், அதில் மிஞ்சம் ஏதாவது இருக்கா, இல்லையா என்று ஆத்திரமாக கேட்க, அவரும் அந்தளவிற்கு முட்டாள் இல்ல நான். மீதி இருக்கு என்றார்.
கோபத்தில் மீனா நீ ஏன் என்னுடைய அம்மா வீட்டிற்கு போன, அப்படி போக வேண்டுமென்றால் உன்னுடைய அம்மா வீட்டிற்கு போக வேண்டியது தானே என்று கேட்க, எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாக இருந்தார். செந்தில் சாப்பாடு வாங்க சென்றுவிட்டார்.
கோமதி மற்றும் மீனா அந்த நேரம் பார்த்து கோமதி போன் போடவே, மீனா மற்றும் கோமதி இருவரும் அன்பாக பேசிக் கொண்டனர். மீனா சாப்பிடாமல் இருந்ததைக் கண்டு வருத்தப்பட்டார். ராஜீ கதிரை முழுசா மாத்திவிட்டாள். ராஜியின் முந்தானையை பிடித்துக் கொண்டு பின்னாடியே போறான். அந்தளவிற்கு மாறிவிட்டான் என்று கோமதி சொல்ல, ஆமாம் அத்தை அவர்கள் இருவரும் Made For Each Other என்றார். அதாவது, ராஜீக்காக பிறந்தவர் தான் கதிர், கதிருக்காக பிறந்தவர் தான் ராஜீ என்றார். கடைசியாக அத்தை உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று வருத்தமாக பேசினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.