சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ், முத்து - மீனாவை பார்க்க விரும்பும் விஷயத்தை சொல்லியுள்ளார் ரோகிணி, இதனால் அவருக்கு உதவ முடிவெடுத்துள்ளார் மீனா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் மகன் கிரிஷுக்கு காய்ச்சல் அதிகரித்ததால், அவர் சிந்தாமணி அழைத்து வந்த டாக்டருக்கு போன் போட்டு வரச் சொல்ல, அவரோ, தான் எழுதிக் கொடுத்த மாத்திரையை போடுங்கள், அது போட்டும் சரியாகாவிட்டால் நான் வந்து பார்க்கிறேன் என கூறுகிறார். கிரிஷ், முத்து மற்றும் மீனாவின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவங்க ரெண்டு பேரையும் பார்க்க வேண்டும் என கூறுகிறான். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
26
மீனாவிடம் உதவி கேட்கும் ரோகிணி
கிரிஷுக்கு காய்ச்சல் குறையாததால், அவன் கேட்கும்படி, முத்துவையும் மீனாவையும் வந்து பார்க்க சொல் என ரோகிணியின் அம்மா கூறுகிறார். இதையடுத்து ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார் ரோகிணி, அந்த நேரத்தில் அங்கு மீனாவும் வர, அவரிடம் உங்களிடம் ஒரு உதவி கேட்க வந்திருப்பதாக சொல்கிறார் ரோகிணி. ஏற்கனவே உனக்கு உதவி பண்ணி நான் கெட்ட பெயர் வாங்குனது போதாதா என மீனா சொல்ல, பின்னர் விஷயத்தை கூறுகிறார். கிரிஷுக்கு காய்ச்சல் அடிக்கிறது, அவன் உங்களை பார்க்க ஆசைப்படுகிறான். நீங்க வந்து பார்த்தால் சரியாகிவிடும் என கூறுகிறார் ரோகிணி. அதற்கு மீனா, தான் முத்து மற்றும் அண்ணாமலையிடம் பேசிவிட்டு சொல்வதாக கூறுகிறார்.
36
அண்ணாமலை எடுக்கும் முடிவு
அதேபோல் வீட்டில் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார் அண்ணாமலை. மகன்கள் அனைவரையும் ஹாலில் உட்கார வைத்து பேசும் அண்ணாமலை, இனி முத்துவும் மீனாவும் மனோஜின் ரூமில் தங்குவார்கள் என்று கூறுகிறார். ஏனெனில் நேற்றைய எபிசோடில் முத்துவும், மீனாவும் இரவில் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கும் போது, அண்ணாமலை வெளியே வர, அவரை பார்த்ததும் முத்துவும் மீனாவும் தனித்தனியே சென்றுவிட்டனர். இதனால் அவர்களுக்கு ரூம் கொடுக்க முடிவெடுத்துள்ளார் அண்ணாமலை. மனோஜும் தற்போது சிங்கிளாக இருப்பதால் முத்துவையும் மீனாவையும் அவன் ரூமில் தங்க சொல்கி்றார்.
அண்ணாமலையின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜயா, மனோஜ் எங்கு போய் தங்குவான் என கேட்க, அவன் ஹாலில் படுத்து தூங்கட்டும் என சொல்கிறார் அண்ணாமலை. மனோஜும் அதெல்லாம் முடியாது என சொல்ல, உனக்கு இன்னொரு கல்யாணம் ஆன பிறகு உனக்கு நானே மாடியில் ரூம் கட்டி கொடுக்குறேன் என சொல்கிறார் அண்ணாமலை. அப்போது ரவி, நீ என்னுடைய ரூமில் தங்கிக்கோன் என சொல்லி மனோஜை அழைக்கிறார். அவர் அதற்கும் சம்மதிக்கவில்லை. பின்னர் அண்ணாமலையின் முடிவுக்கு முத்து - மீனாவே வேண்டாம் என சொல்ல, அவர் நான் சொன்னா கேப்பிங்களா மாட்டீங்களா என சொன்னதும் ஓகே சொல்லிவிடுகிறார்கள்.
56
சிந்தாமணியிடம் புலம்பும் விஜயா
இதையடுத்து பார்வதியின் வீட்டுக்கு செல்லும் விஜயா, அங்கு சிந்தாமணியை அழைத்து பேசுகிறார். அவரிடம் வீட்டில் நடக்கும் விஷயங்களை சொல்கிறார். மனோஜுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணிவைக்கணும் என ஆசைப்படுவதாக கூறுகிறார். இதைக்கேட்ட சிந்தாமணி, உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும் என கேட்க, அதற்கு விஜயா, எனக்கு படிச்ச பொண்ணா இருக்கணும், நிறைய சொத்து இருக்கணும், வீட்டுக்கு ஒரே பொண்ணா இருக்கணும் என சொல்கிறார். நீங்க கேக்குற மாதிரி பொண்ணு கிடைக்கும் ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கு என கூறுகிறார்.
66
சிந்தாமணி கொடுக்கும் ஐடியா
அதற்கு விஜயா, என்ன சிக்கல் என கேட்க, நீங்க பணக்கார வீட்டு பொண்ணா கேக்குறீங்க, அவங்க விசாரிக்கும் போது உங்க சின்ன மகன் ரவி நல்ல படிச்சவன்னு சொல்லலாம், ஆனால் இரண்டாவது மகன் ஒரு டிரைவர், அவனோட பொண்டாட்டி பூ விக்குறவனு சொன்னா பொண்ணு தர மாட்டாங்க என சிந்தாமணி சொல்ல, சரி நான் அவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டே துரத்திவிடப் பார்க்கிறேன் என சொல்கிறார். இதனால் என்ன நடக்கப்போகிறது? முத்து - மீனாவை வீட்டை விட்டு துரத்த விஜயா என்ன செய்யப்போகிறார் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.