Singappenne Serial Today Episode Twist : சிங்க பெண்ணே சீரியலில் அன்பு ப்ரொடக்ஷன் ஹெட் ஆக பதவி ஏற்றதால் ஆட்டப்பாட்டமாக இருக்கும் ஆனந்தி மற்றும் அன்பு எதிர்பார்க்காத பிரச்சினைகளும் வருகின்றன இந்த எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
சிங்கப்பெண்ணே சீரியல் நேற்றைய எபிசோடில் அன்பு புரட்டேஷன் ஹெட் ஆக நாற்காலியில் அமருகிறார். அவருக்கு ஆனந்தி காபி கொண்டு போய் கொடுக்கிறார். இது என்ன ஆனந்தி என்று அன்பு கேட்க சுடுதண்ணி என்று கூறுகிறார். உங்க ஊர்ல சுடுதண்ணி இந்த கலர்லையா இருக்கும் என்று அன்பு கிண்டலாககேட்க. அதுல கொஞ்சம் சக்கர பால் செத்து கொண்டு வந்து இருக்கேன் என்று விளையாட்டாக பேசுகிறார். நீ இப்போ சூப்பர்வைசர் நீ எதுக்கு இந்த வேலை எல்லாம் பாக்குற என்று அன்பு கேட்க நான் ஃபர்ஸ்ட்ல இருந்தே இந்த சேர்ல இருக்குறவங்களுக்கு நான் தான் காபி கொடுப்பேன்.இப்பவும் நான் தான் குடிப்பேன் என்று கூறுகிறார் ஆனந்தி. நீ எப்பவும் ஏன் அன்பு தான் நான் எப்பவும் உன் ஆனந்தி தான் என்று தன் காதலை தெரிவிக்கிறார் ஆனந்தி.
25
சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
அன்பு ப்ரோடுக்ஷன் ஹெட் ஆக பதவி ஏத்த பிறகு வேலையில் இருக்கும் ஆட்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். கருணாகரன் அந்த வேலையை விட்டு நின்றதால் கருணாகரனின் கொடுமைகளிலிருந்து தப்பித்து விட்டதாகவும் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றன. அனைவரும் சாப்பிடுவதற்கு மாடிக்குச் சென்றனர். அப்பொழுது சௌவ்சௌவ் இந்த பார்ட்டியை நம்ம கொண்டாடியே ஆக வேண்டும் என்று அனைவரிடம் பேச டான்ஸ் ஆடலாம் என்று முடிவு செய்கின்றனர். அன்பும் ஆனந்தியும் மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்கு நடனம் அடைகின்றனர் . பட்டமும் பாட்டமாக சந்தோசமாக இருக்கின்றனர்.
35
ஆனந்தி அன்பு கொண்டாட்டம்
இவர்களின் சந்தோசத்தை கெடுக்கும் விதமாக அரவிந்த் தற்போது வில்லனாக மாறியுள்ளார். முன்பகையை பழி தீர்க்கும் விதமாக வேலையை விட்டு சென்ற கருணாகரனை சந்தித்து நீங்க வேலையில் இல்லாததால் உங்க இடத்தை அன்பு பிடித்துக் கொண்டான் நீங்க சீக்கிரம் வரலேன்னா அந்த இடத்தில் அவன் நிரந்தரமா இருந்து விடுவான் அப்புறம் உங்களுக்கு அந்த வேலை கிடைக்காது என்றும் கருணாகரனை வற்புறுத்தி வேலைக்கு வர வரைக்கும் எண்ணத்தை கருணாகரன் மனதில் விதைக்கிறார். நீங்க இந்த வேலைக்கு வரலைன்னா அது அன்புக்கு தான் சாதகமா முடியும் என்று கருணாகரனிடம் கூறுகிறார்.
45
அரவிந்திடம் சவால் விடும் அன்பு:
அன்பை இந்த பதவியை விட்டு தூக்குவதற்கு திட்டமிடுகின்றார் அரவிந்த். அரவிந்திற்கு அன்பு இப்பதவையில் இருப்பது பிடிக்கவில்லை என்பதால் இந்த பதவியை விட்டு தூக்குவதற்கு எதிரியாகவே நினைத்து பேசுகிறார் அப்பொழுது நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதற்கு முடிவுக்கு நான் சரிதான் என்று அரவிந்திடம் சவால் விடுகிறார். பதவியை விட்டு உன்னை தூக்கி காட்றேன் என்று அரவிந்து சொல்ல நீ என்ன செஞ்சாலும் சரிதான் என்று சொல்லிவிட்டு செல்கிறார் அன்பு.
55
கோகிலாவின் மாமனார் மாமியார் எடுக்கும் அதிரடி முடிவு:
ஆனந்தி அன்பு வீட்டிற்கு சென்றால் தான் நான் கோகிலாவை என் வீட்டிற்கு கூட்டி செல்வேன் என்று கோகிலாவின் மாமனார் கூறுகிறார் அதற்கு ஆனந்தி இப்போதைக்கு அது நடக்காது என்று சொல்ல அப்போ கோகிலாவையும் என் வீட்டிற்கு செல்ல முடியாது என்று சொல்லிவிட்டு செல்கிறார் கோகிலாவின் மாமனார். கோகிலா அழுதபடியே இருக்கிறார் அதை கண்ட ஆனந்தி மிகவும் வருத்தப்படுகிறார்.